Pages

Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Thursday, November 4, 2010

தீப ஒளித் திருநாள்...


அனைவருக்கும்
என் உளம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்நாள் நம் அனைவர் வாழ்விலும் மட்டட்ற மகிழ்ச்சியை தரட்டும் என் வேண்டிக்கொள்கிறேன்.


என் அலுவலகத்தில் செய்யப்பட்ட தீபாவளி ஏற்பாடுகள் சில.







பி.கு : நண்பர்கள் அனைவரும் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, October 31, 2010

மணநாள் வாழ்த்து

ஈருடல் ஓருயிராய்
சில பத்தாண்டுகள்
இணைபிரியா வாழ்வு கண்டு
எமை பெற்றெடுத்து
சீராட்டி தாலாட்டி
சோறூட்டி ஆளாக்கி
படிப்பறிவித்து
இந்நிலைக்கு கொண்டுவர
எவ்வளவு பாடுபட்டீர்!
உம்மில் பிறந்தமைக்கு
யாம் பெருமை கொண்டோம்.
என்றேனும் ஓர்நாள்
எமை பெற்றமைக்கு
நீர் பெருமைப்படுவீர்.
உம்மை வாழ்த்த
வயதின்மையால் வணங்குகிறோம்.


இன்று திருமணநாள் காணும் என் பெற்றோருக்கு இதனை உரித்தாக்குகிறேன்.

Monday, September 6, 2010

ஆசிரியர் தினம்



படிப்பறிவித்த ஆசான்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

Tuesday, August 31, 2010

ரெண்டாங்கிளாஸ்


ஹையா... இன்னிக்கு நான் ஒண்ணாங்கிளாசுல இருந்து ரெண்டாங்கிளாசுக்கு போறேன். ஒண்ணுமே புரியலயா? ஆச்சுங்க இன்னியோட ஒரு வருசம் நானும் காலத்தில் இறங்கி. நானும் ஒரு வருசமா எழுதுறேன் அப்படின்னு நினைக்கும்போது எனக்கே பெருமையா இருக்கு. ஏதோ அவ்வப்போது தோன்றதை கிறுக்கிட்டு இருந்தேன். அதையே எழுத்து வடிவாக்கி பார்த்தபோது என்ன பெருமிதமா இருந்துச்சு தெரியுமா?

இந்த ஒரு வருசத்துல நான் நிறைய மாற்றங்களை சந்திச்சு இருக்கேன்(எல்லாமே நல்ல வழியிலதாங்க). அதற்காக பதிவுலகில் நான் படித்த எல்லா பதிவர்களுக்கும் என்னை படித்த எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன்.

இந்த ஒரு வருச காலத்துல நான் எழுதியது மிகவும் குறைவு என்றாலும் எனக்கு கிடைத்த சந்தோசத்துக்கு அளவே இல்லை. அதற்கு நேரமின்மை, வேலைப்பளு மற்றும் இணைய வசதியின்மை என பல காரணங்கள் உண்டு. நான் எழுதிய பதிவுகளை போலவே எனக்கு கிடைத்த நண்பர்களும் குறைவு. ஏனெனில் ஆரம்ப காலங்களில் நான் எனது பதிவுகள் எதையுமே திரட்டிகளில் இணைத்ததில்லை. சொல்லப்போனால் எனக்கு அவற்றை பற்றி தெரியவும் இல்லை. ஒரு பத்து நாட்களுக்கு முன்புதான் திரட்டிகளில் இணைந்தேன்.இனிவரும் காலங்களில் அதிகமாக எழுதி நட்பு வட்டத்தை விரிக்க முடியும் என் நம்புகிறேன்.

என்னையும் மதிச்சு எனக்கு முதல் பின்னூட்டம் இட்ட நண்பன் ராஜூ மற்றும் முதல் பாலோயராக சேர்ந்த சீனா அய்யா அவர்களுக்கு முதல் நன்றிகள். எனது பாலோயர்களாக இருக்கும் சீனா, சித்ரா சாலமன், நிகே, தேவன் மாயம், விஜய், அம்பிகா, கே.ஆர்.பி.செந்தில், ஜில்தண்ணி - யோகேஷ், பனித்துளி சங்கர், எஸ்.கே, மலாக்கா முத்துக்கிருஷ்ணன், வெறும் பய, வால்பையன், செந்தில், நிஸ் (ராவணா), பதிவுலகில் பாபு, பிரியமுடன் ரமேஷ், ஜோதிஜி அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அடிக்கடி பின்னூட்டம் இட்ட சீனா அய்யா மற்றும் சித்ரா மேடம் இருவருக்கும் சிறப்பு நன்றிகள். மேலும் அவ்வப்போது வந்து பின்னூட்டம் இட்ட ராஜூ, லோகு, முரளிகுமார் பத்மநாபன், நிகே, பிரியமுடன் வசந்த், தேவன் மாயம், காயத்ரி, ரோஸ்விக், அண்ணாமலையான், ஆதிமூலகிருஷ்ணன், இல்லுமினாட்டி, ப்ரியா, விக்னேஷ்வரி, கலாநேசன், அம்பிகா, முனியாண்டி, ஜில்தண்ணி-யோகேஷ், கே.ஆர்.பி.செந்தில், நிகழ்காலத்தில், வேலு ஜி, நந்தா ஆண்டாள்மகன், எஸ்.கே, பிரியமுடன் பிரபு, மோகன், பிரியமுடன் ரமேஷ், பதிவுலகில் பாபு, படைப்பாளி மற்றும் அஹமது என அனைவருக்கும் நன்றிகள். சமீப காலமாக அடிக்கடி பின்னூட்டம் இட்ட வெறும்பய ஜெயந்த்க்கும் நன்றி.(வயதில் மூத்த பதிவர்கள் மன்னிக்கவும், ஏனெனில் அண்ணன், தம்பி, நண்பர், சார் போன்ற அடைமொழி இல்லாமல் வெறும் பெயர்களை மட்டுமே எழுதிவிட்டேன்.)
சித்ரா மேடமுக்கு தனியே ஒரு தேங்க்ஸ், ஏன்னா நான் என்ன எழுதினாலும் அதற்கு உடனே பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தியதற்காக.

இன்னிக்கு பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் என் கல்லூரி நண்பன் மணிகண்டனுக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

ரொம்ப நேரமா நன்றி சொல்லி சொல்லி வாய் வலிக்குதுங்க. அதனால ஒரு ரெஸ்ட் தேவை. மீண்டும் சந்திப்போம்.

டிஸ்கி : இன்னிக்கு நான் ஒண்ணாங்கிளாசுல இருந்து ரெண்டாங்கிளாசுக்கு போறேன். பாஸா? பெயிலா? நீங்கதான் சொல்லணும். சொல்லுவீங்களா?..

Tuesday, August 17, 2010

என்ன கொடுமை சார் இது?

என்ன கொடுமை சார் இது?

நேற்றைய கிரிக்கெட் மேட்ச் பார்த்த அனைவருக்கும் எழும் கேள்வி இது தான்.
என்ன தான் விளையாட்டில் வெற்றி தோல்வி முக்கியம் என்றாலும் ஒரு உண்மையான விளையாட்டு வீரனாக இருந்து காட்டியிருக்கலாம் ரந்திவ்.
எங்கே ஒரு ரன் அடித்தால் சேவாக் சதம் போட்டு விடுவாரோ என வேண்டுமென்றே நோ-பால் போட்டு விட்டார்.
கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்பட்டாலும் இவர் போன்றோரால் அந்த பெயருக்கே அவமானம்.
இன்னும் ஒரு பால் மட்டுமே உள்ளது 10 ரன் அடிக்கவேண்டும் என்று இருந்து இவ்வாறு செய்திருந்தால் கூட ஏற்று கொள்ளலாம்.
பாவம் சேவாக் அவரது மனநிலையை சற்று யோசித்து பாருங்கள். சிக்ஸர் அடித்தும் கணக்கில் வராமல் போய் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
என்னத்த சொல்ல.... :( :( :(
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வல்லபாய் பட்டேல் சிலை:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு என்னவென்றால் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை அமைப்பராம்.
நர்மதா அணையின் கரையோரம் அமையாப்பொகும் இந்த சிலையின் உயரம் 180 மீட்டராகும்.
மொத்த அணை நிரம்பி இருந்தால் அதன் நீர் மட்டம் 138 மீட்டர் இருக்கும். சிலையின் உயரம் அதை விட அதிகமாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.
இன்னும் அதிகரப்பூர்வமாக அறிவிப்பு வராவிட்டாலும் சிலை அமைக்கபோவதென்பதோ உறுதி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்து:


இன்று 47வது பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் சங்கர் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Sunday, August 1, 2010

நண்பர்கள் தினம்

பள்ளியில் சிலேட்டுக்குச்சிக்காக சண்டையிட்ட நண்பன், ஆசிரியையிடம் சொல்லாமல் வெளியே சென்று என்னோடு சேர்ந்து அடிவாங்கிய நண்பன், விளையாட்டுக்கு குட்டியதால் அம்மாவை அழைத்து வந்து மிரட்டிய நண்பி, ஆறாம் வகுப்பில் அடிக்கடி மோதிக்கொண்ட அழகு தோழி, ஏழாம் வகுப்பில் சாப்பாட்டை பகிர்ந்து கொண்ட நண்பன், மாந்தோப்பில் திருடி மாட்டி விட்ட நண்பன், சைக்கிள் பழக்கி விடுவதாக சொல்லி பலமுறை கீழே விழ வைத்த நண்பன், பள்ளியில் படிக்கும் போது முதல் முறையாக திருட்டு சினிமாவுக்கு அழைத்து சென்ற நட்பு, காரணமே இல்லாமல் நாலு வருஷம் பேசாமல் இருந்து பின்பு பேசிய நண்பன், பரீட்சைக்கு முன்தினம் பாடம் சொல்லி தந்த தோழி, குரூப் ஸ்டடி என்று என்னை வீட்டில் இருந்து வெளியே அழைத்து சென்று ஊரையே சுற்றிய நண்பன், இரவு பல மணி நேரம் அரட்டையடித்த நண்பர்கள், பன்னிரெண்டாம் வகுப்பில் பயாலஜி சொல்லி தந்த நண்பி, கல்லூரியில் கட் அடித்து வெளியே சுற்றித் திரிந்த நண்பர்கள், கல்லூரி ஹாஸ்டலில் திருட்டுத்தனமாய் தங்க வைத்த நண்பர்கள், வேலைக்கு வந்த புதிதில் அறிமுகமாகி என்னோடு இணைந்து விட்ட நண்பர்கள், தொடர்ந்து போன் மூலமாகவோ மெயில் மூலமாகவோ இன்று வரை தொடர்பில் இருக்கும் நண்பர்கள், பதிவு உலகின் மூலமாக கிடைத்த புதிய நண்பர்கள், மற்றும் என் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்த மற்றும் இருந்து கொண்டு இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.


இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Tuesday, January 26, 2010

குடியரசு தினம்


இந்தியர் அனைவர்க்கும் என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


- அன்பரசன்

Thursday, December 31, 2009

புதுசு


எதுவாருந்தாலும் அது புதுசா இருந்தா அதோட மவுசே தனி தான்.


சின்ன பையனா இருந்த போது புது துணி, புது விளையாட்டு
ஸ்கூல்ல படிக்கும்போது புது பேனா, புது பேக், புது பென்சில்
காலேஜூல படிக்கும்போது புது கேர்ல்பிரண்டு, புது கிளாஸ்ரூம், புது பாடம்(படம்), புது லெக்சரர்
வேலைக்கு போனதுக்கு அப்புறம் புது பைக், புது கார், புது வீடு, புது பொண்டாட்டி

இப்படி வாழ்க்கையோட ஒவ்வொரு ஸ்டேஜுலயும் நாம சந்திக்கிற பல விசயங்கள் புதுசு தான். அப்படிப்பட்ட புதுசு எல்லாமே நமக்கு மாற்றத்தையும் சந்தோசத்தையும் தான் தந்திருக்கு.


அதே மாதிரி வரப்போற இந்த புது வருசமும் நமக்கு சந்தோசத்தையே தரும்னு எதிர்பார்க்கிறேன்.


இந்த வருசம் சந்தோசத்தை மட்டும் தராம புது நட்பு, வெற்றி, தோல்வி, கவலை, ஏமாற்றம், எதிர்பார்ப்பு, காதல், பாசம் என எல்லாம் கலந்த கலவையை கொடுக்கட்டும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.


கிடைக்கக்கூடிய வெற்றியானது தோல்விய விட குறைஞ்சது ஒரு சதவீதமாவது அதிகமா இருக்கட்டும்னு எதிர்பார்க்கிறேன்.
மற்றபடி உலகிலுள்ள எல்லா மக்களும் மிக மகிழ்ச்சியா இருக்க என் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன்.


அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


- அன்பரசன்.