Pages

Tuesday, January 26, 2010

பெண்கள் ஹாக்கி


ஹாக்கி!
இந்தியாவின் தேசிய விளையாட்டு.
பெயரைக்கேட்டாலே ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்வான்.

ஆண்கள் ஹாக்கியில் அதிக கவனம் செலுத்தும் இந்திய ஹாக்கி சம்மேளனம் பெண்கள் ஹாக்கி பற்றி கண்டு கொள்வதே இல்லை.வீராங்கனைகள் மே2008 முதல் இன்று வரை சம்பளம் கிடைக்காமலேயே விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் அரசு கொடுத்த ஒரு கோடி ரூபாயை ஆண்கள் அணி வீரர்களுக்கு சம்பளமாக கொடுத்து விட்டனர். அது மட்டுமின்றி மகளிர் அணிக்கு எந்த ஸ்பொன்செர்ஷிப்பும் கிடையாது. அணியின் பலர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.சம்பளமின்றி ஏழ்மையான குடும்ப சூழலில் ஒன்றரை வருடம் சமாளிப்பது எளிதான காரியம் அல்ல
.
பொறுத்து பொறுத்து பார்த்த அவர்கள் இறுதியாக ஒரு வங்கியில் கூட்டுக்கணக்கு தொடங்கியுள்ளனர். அதில் பொதுமக்கள் யார் வேண்டுமாலும் பணம் போடலாம். பின்பு அந்த பணம் அணியில் உள்ள எந்த வீராங்கனைக்கும் அவசர நேரத்தில் கொடுக்கப்படும்.

ஏன் இவ்வாறு செய்தீர்கள் என கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் இதோ "நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. சம்பளம் தராவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் விளையாட தேவையான அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுங்கள். அவசர நேரத்தில் எங்களுக்கு தேவையான பண உதவி செய்யுங்கள். அது போதும்"

ஹாக்கியில் இந்தியாவின் பெயர் சர்வதேச அளவில் புகழ் பெற வேண்டுமெனில் இத்தகைய பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.

இந்திய ஹாக்கி சம்மேளனம் இனிமேலாவது ஏதாவது நடவடிக்கை எடுக்குமா?

குடியரசு தினம்


இந்தியர் அனைவர்க்கும் என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


- அன்பரசன்

Saturday, January 2, 2010

நட்பு



மூன்று நிமிட குளியல்,
ஐந்து நிமிட சாப்பாடு,
நிமிடங்களில் பயணம்,
பல மணி நேர வேலை,
சில மணி நேர உறக்கம்,
என வாழ்வானது இயந்திரமாய்
மாறிப்போன பின்பும்
வாழ்வின் அர்த்தம்
புரியவைப்பது உன் நட்பு மட்டுமே.

- அன்பரசன்