மன்னாதி மன்னன் தலைப்பில் இந்திரா அவர்கள் திப்பு சுல்தான் பற்றியும், அண்ணாமலை அவர்கள் ராஜராஜசோழன் பற்றியும் ஏற்கனவே எழுதிவிட்டனர்.
மன்னாதி மன்னன் என்கிற இந்த தொடர்பதிவில் கிருஷ்ணதேவராயர் பற்றி பார்ப்போம்.
கிருஷ்ணதேவராயர்:
இந்திய வரலாற்றில் விஜயநகர பேரரசு ஒரு முக்கிய இடம் கொண்டுள்ளது. நான்கு மரபுகள்- சங்கம, சாளும, துளுவ, ஆரவீடு- கி.பி 1336 முதல் 1672 வரை விஜய நகரை ஆட்சி புரிந்தன.
விஜயநகரத்தின் மிகச்சிறந்த பேரரசரான கிருஷ்ண தேவாராயர் துளுவ மரபை சேர்ந்தவர். சிறந்த போர் ஆற்றல் மிக்கவராகவும், கம்பீரமான தோற்றம் கொண்டவராகவும் மற்றும் அறிவற்றால் நிரைந்தவராகவும் காணப்பட்டார். படையெடுத்து வரும் பாமினி அரசு படைகளை தடுத்து நிறுத்துவதே அவரது அப்போதைய முதல் கடமையாக இருந்தது. 1520ல் பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில் ஷா என்பவரை தோற்கடித்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார். கஜபாதி மரபின் அரசரான பிரதாபருத்திரனை முறியடித்து தெலுங்கானா முழுவதையும் கைப்பற்றினார். போர்ச்சுக்கீசியர்களுடன் நட்பாகவே இருந்தார். தாம் வைணவராக இருந்த போதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை, இலக்கிய புரவலராக திகழ்ந்ததால் விஜயபோஜர் எனவும் அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவில் பெரும்பாலான கோவில்களை அவர் செப்பனிட்டார். விஜயநகரத்தில் விட்டலசுவாமி மற்றும் ஹசரராமசுவாமி ஆலயங்களையும் அவர் எழுப்பினார். தனது பட்டத்தரசி நாகலாதேவியின் நினைவாக அவர் நாகலாபுரம் என்ற நகரை நிர்மானித்தார்.
ஆட்சிமுறை :
ஆட்சி நன்கு சீரமைக்கப்பட்டு நிர்வாகம், நீதி, சட்டம் ஆகியவற்றில் அரசர் முழு அதிகாரம் பெற்று விளங்கினார். பேரரசு பல மண்டலங்களாவும், மண்டலம் பல நாடுகளாகவும், நாடு பல ஸ்தலங்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. ஸ்தலம் என்பது பல கிராமங்களை கொண்டிருந்த பிரிவாகும். நிலவரி, துறைமுகங்களில் வசூலிக்கப்பட்ட சுங்கம், பல்வேறு தொழிலாளர்களின் மீதான வரிகள் ஆகியவை அரசின் வருவாயாக இருந்தது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. நீதித்துறையை பொறுத்தவரையில் உடல் உறுப்பை சிதைத்தல், யானைக்காலால் இடருதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது. ராணுவம் திறமையான முறையில் அமைக்கப்பட்டு இருந்தது. குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு பிரிவுகளாக இருந்தது. படைவீரர்களுக்கு ஊதியம் பெரும்பாலும் பணமாகவே வழங்கப்பட்டது.
சமூக வாழ்க்கை :
பட்டு மற்றும் பருத்தி உடைகளை மக்கள் உடுத்தினர். வாசனைப்பொருட்கள், மலர்கள், அணிகலன்கள் போன்றவற்றையும் மக்கள் பயன்படுத்தினர். நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை ஒரு சில பொழுதுபோக்குகளாகும். மகளிர் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே கல்வியில் சிறந்து விளங்கினர். ஹன்னம்மா மற்றும் திருமலம்மா ஆகியோர் அக்காலத்தில் புகழ்வாய்ந்த பெண்புலவர்கள் ஆவர். தேவதாசி முறை வழக்கத்தில் இருந்தது. அரசகுடும்பத்தில் பலதாரமணம் வழக்கில் இருந்தது.
பொருளாதார நிலை :
மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை. புதிய ஏரிகள் வெட்டப்பட்டு நீர்ப்பாசன வசதி சிறப்பாக இருந்தது. துங்கபத்திரா நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டது. பல்வேறு தொழில்கள் சிறந்து விளங்கின. முக்கிய தங்க நாணயம் வராகன் என்பதாகும். அயல்நாட்டு வணிகம் பெருகியதால் பொதுவாக நாட்டில் செல்வசெழிப்பு காணப்பட்டது. பருத்தி மற்றும் பட்டுத்துணிகள், நறுமணப்பொருட்கள், அரிசி, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதிப்பொருட்கள் ஆகும். குதிரைகள், முத்துக்கள், செம்பு, பவளம், பாதரஸம், சீனத்துப்பட்டு, வெல்வெட்துணிகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
கலை :
விஜயநகரம் இன்று ஹம்பி இடிபாடுகளாக காட்சியளித்தாலும் அங்குள்ள கோயில்கள் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். திருப்பதியில் காணப்படும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது அரசிகளின் உலோகப்படிமங்கள் அவரது ஆட்சியின் உலோகக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகள் புகழ்பெற்றிருந்தன. இவரது ஆட்சிக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சம் பெற்றது என்றே சொல்லலாம்.
கிருஷ்ணதேவராயரதது மறைவுக்கு பிறகு அச்சுததேவர், வெங்கடர் ஆகியோர் அரியணை ஏறினர்.
பி.கு : நண்பர்களே இது ஒரு சிறு முயற்சி மட்டுமே. பிழையேதும் இருப்பின் தெரியப்படுத்தவும், சரி செய்து கொள்கிறேன்.
இதனை தொடர அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் அவர்களையும், நண்பன் செல்வாவையும் அன்புடன் அழைக்கிறேன்.
28 கருத்துக்கள்:
அன்பா இன்னும் கொஞ்சம் மெனகெட்டு இருக்கலாம்.. இருப்பினும் தொகுத்து தந்தவரைக்கும் பாரட்டுக்கள்
நல்ல தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி. :-)
நல்ல பகிர்வு.. நன்றி
பகிர்வுக்கு நன்றி நண்பா!
விஜய நகரம் இன்று பெரும்பாலும் இல்லாமல் போய் விட்டது... இது வரை மூன்று முறை ஹம்பிக்கு போயிருக்கிறேன்.. இடிந்து போன நகரம் கூட கண்டால் இமைகள் மூட மறுக்கும் அளவுக்கு இன்னும் அற்புதமாக உள்ளது.. பல கோவில்கள் இன்னும் ஆரோக்கியமாக உள்ளன..
இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின் இப்படி இருக்கிறதென்றால் அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும்... !!!!
கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இந்த விஜய நகரம்...
நல்ல தொகுப்பு.. வாழ்த்துக்களும்.. நன்றியும்..
எனக்குத் தெரியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி!
நல்ல தொகுப்பு.. வாழ்த்துக்கள்..
நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள் தல... :)
இது ஒரு அருமையான தொடர் பதிவு.அதை சீரிய எழுத்து நடையில் ஸ்வாரஸ்யமான எழுத்து நடையில் கொண்டு சென்று இருக்கிறீர்கள்
:-)
ரைட்டு.
ரத்தினச்சுருக்கமாக அழகாக
எழுதியிருக்கிறீர்கள் நண்பரே!
தங்களுக்கு நன்றிகள்!
// சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை ஒரு சில பொழுதுபோக்குகளாகும்.//
அட பாவமே அப்பவே கண்டுபிடிச்சிட்டாங்களா ..?
// வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகள் புகழ்பெற்றிருந்தன. இவரது ஆட்சிக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சம் பெற்றது என்றே சொல்லலாம்.///
உண்மைலேயே கிருஷ்ண தேவராயரைப் பற்றி நிறைய விசயங்களை தொகுத்துள்ளீர்கள் ..
//இதனை தொடர அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் அவர்களையும், நண்பன்செல்வாவையும் அன்புடன் அழைக்கிறேன்.///
ஹி ஹி ஹி .. நான் ஒரு தடவ மன்னர்களைப் பற்றி எழுதினதே ஒருத்தருக்கும் புரியலை ..
மறுபடியும் எழுதினா பதிவுலகம் தாங்காது .. நான் இந்த தொடர் பதிவு எழுதிட்டேன்க.. நேரம் இருந்தா பாருங்க ..!!
//கே.ஆர்.பி.செந்தில் said...
அன்பா இன்னும் கொஞ்சம் மெனகெட்டு இருக்கலாம்.. இருப்பினும் தொகுத்து தந்தவரைக்கும் பாரட்டுக்கள்//
அடுத்தவாய்ப்பு கிடைத்தால் இதனினும் நன்றாக செய்வேன்.
@ சித்ரா
@ வினோ
@ பாலாஜி
@ ஸ்ரீஅகிலா
@ பதிவுலகில் பாபு
@ மகேஷ் : ரசிகன்
@ ஆர்.கே.சதீஷ்குமார்
@ ராஜு
@ அண்ணாமலை
@ செல்வக்குமார்
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே!
//ப.செல்வக்குமார் said...
//இதனை தொடர அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் அவர்களையும், நண்பன்செல்வாவையும் அன்புடன் அழைக்கிறேன்.///
ஹி ஹி ஹி .. நான் ஒரு தடவ மன்னர்களைப் பற்றி எழுதினதே ஒருத்தருக்கும் புரியலை ..
மறுபடியும் எழுதினா பதிவுலகம் தாங்காது .. நான் இந்த தொடர் பதிவு எழுதிட்டேன்க.. நேரம் இருந்தா பாருங்க ..!!//
அந்த பதிவு நான் ஏற்கனவே படிச்சு இருக்கேன். இருப்பினும் நேரம் கிடைத்தால் முயற்சிக்கவும்.
//வெறும்பய said...
விஜய நகரம் இன்று பெரும்பாலும் இல்லாமல் போய் விட்டது... இது வரை மூன்று முறை ஹம்பிக்கு போயிருக்கிறேன்.. இடிந்து போன நகரம் கூட கண்டால் இமைகள் மூட மறுக்கும் அளவுக்கு இன்னும் அற்புதமாக உள்ளது.. பல கோவில்கள் இன்னும் ஆரோக்கியமாக உள்ளன..
இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின் இப்படி இருக்கிறதென்றால் அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும்... !!!!
கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இந்த விஜய நகரம்...
நல்ல தொகுப்பு.. வாழ்த்துக்களும்.. நன்றியும்..//
தொடர அழைத்தமைக்கு நன்றி நண்பா.
உங்க மூலமாதான் ரொம்ப நாளைக்கு அப்புறம் வரலாறு படிச்சேன்.
நேரமின்மையால் இன்றுதான் பார்க்கிறேன் அன்பு.
நிறைவான தொகுப்புக்கு நன்றி.
//அந்த பதிவு நான் ஏற்கனவே படிச்சு இருக்கேன். இருப்பினும் நேரம் கிடைத்தால் முயற்சிக்கவும்.
//
நிச்சயமா நண்பா ..!!
நல்ல முயற்சி நண்பா தொடருங்கள்...
@ ஹேமா
@ படைப்பாளி
வரவுக்கு நன்றிங்க..
நல்ல தகவல்களை தொகுத்து தந்தமைக்க நன்றி...
நன்றாக தொகுத்து எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
@ ம.தி.சுதா
@ பிரியா
வரவுக்கு நன்றிங்க..
சின்ன சின்ன தலைபிட்டு தெளிவாக எழுதியுள்ளமை வாசிக்க எளிதாக உள்ளது. தொடர்ந்தும் இந்த உத்தியை கையாளுன்க்கள்
நல்ல தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி
@ யாதவன்
@ தியா
நன்றிங்க.
நல்ல முயற்சி....
Post a Comment