நம்ம வாழ்க்கைல நிறங்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஒவ்வொரு வண்ணமும் ஒரு விசயத்த பிரதிபலிக்கிற மாதிரி இருக்கும். சமாதானத்துக்கு ஒரு நிறம், சண்டைக்கு ஒரு நிறம், கோபத்துக்கு ஒரு நிறம், சந்தோசத்துக்கு ஒரு நிறம் இப்படி ஒவ்வொரு உணர்வுகளுக்கு ஒரு நிறத்தை ஒப்பிடலாம்.
ஏன் இந்த மாதிரி சொல்றேன்னா ரூம்ல தனியா இருந்த போது எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம் வந்தது (தனியா இருக்கும்போது தான் நிறைய சந்தேகங்கள் வரும்). அது என்னன்னா தீயணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன் கொடுத்தாங்க? ஏன் ஒரு ஆரஞ்சு கலரோ இல்ல ஒரு மஞ்ச கலரோ கொடுக்கல?
இத நான் பலபேர் கிட்ட கேட்டுப்பாத்தேன், ஆனா பாருங்க அவங்க யாருக்குமே தெரியல. அதனால நானே யோசிக்கலாமுன்னு முடிவு பண்ணி குப்புற படுத்து யோசிச்சேன் ம்ஹூம் ஒண்ணும் வரல.அப்புறமா மல்லாக்க படுத்து யோசிச்சேன் அப்பவும் வரல. ஒரு நாள் குளிச்சுட்டு இருக்கும் போது திடீர்னு ஒரு யோசனை வந்தது, அப்புறம் அத வச்சு பயங்கரமா யோசிச்சதுல ஒரு வழியா விடை கிடைச்சுது.
அது என்னான்னா தீயணைப்பு வண்டில ஒரு ஏணி இருக்கும்ல, அதுல ஏறனும்னா என்ன பண்ணனும்? நம்ம பாதத்தை வச்சு தான் ஏறனும் (பாதத்தை வச்சு ஏறாமா அடிவயித்த வச்ச ஏறுவாங்கன்ணு நீங்க கேக்குறது தெரியுது). சரி பாதத்தை வச்சு ஏறியாச்சா, அதுக்கு அப்புறமா பாதத்தை அளக்கணும்னா அதுக்கு ஒரு ரூலர் தேவை. சரியா? ஒரு நாட்டோட ரூலர் யாருன்னு பாத்தா அது ராஜாவோ அல்லது ராணியாவோ தான் இருக்கணும். ராணின்னு சொன்னவுடனே தான் தோணுச்சு குயின் எலிசபெத் இங்கிலாந்து நாட்டோட ராணின்னு. அது மட்டும் இல்லாம எலிசபெத்-ங்கறது ஒரு கப்பலோட பேருங்கூட. கப்பல் எங்க இருக்கும்? எப்போதுமே தண்ணில தான தப்பு தப்பு தண்ணிக்குள்ள தான். ஜப்பான் இருக்கே ஜப்பான் அது நாலு பக்கமும் தண்ணியால சூழப்பட்ட நாடு. அந்த ஜப்பானோட தேசியக்கொடி கலர் சிவப்பு. அதனால தான் தீயணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் கொடுத்து இருப்பாங்கன்னு தோணுது.
என்ன நாஞ்சொல்றது, சரி தானே?
பி.கு : இதைவிட சரியான விளக்கம் தெரிந்தவர் யாரேனும் இருப்பின் பின்னூட்டம் மூலமாக தெரியப்படுத்தலாம். வரவேற்க்கப்படுகிறீர்கள்.
21 கருத்துக்கள்:
நல்ல சிந்தனை.. மல்லாக்கபடுத்த இன்னும் நல்லா யோசிக்கலாம்.... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
http://en.wikipedia.org/wiki/Fire_apparatus
..... :-)
யப்பா.. என்ன ஒரு கண்டுபிடிப்பு...
// தண்ணிக்குள்ள தான்//
தண்ணிக்கு மேல இருக்கும் ..!!
// இதைவிட சரியான விளக்கம் தெரிந்தவர் யாரேனும் இருப்பின் பின்னூட்டம் மூலமாக தெரியப்படுத்தலாம். வரவேற்க்கப்படுகிறீர்கள்.
///
ஒருநாள் ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாடப்போனார். அப்போ அங்க ஒரு சிங்கம் வந்தது. அதைப்பார்த்த ராஜா பயந்து போய்ட்டார்.உடனே அவருக்கு யார உதுவிக்கு கூப்பிடறது அப்படின்னு சந்தேகம். அதனால உடனே அவருக்கு ஒரு யோசனை தோணிச்சு. அதனால தீயணைப்பு வண்டிக்கு சிவப்பு கலர் வச்சுட்டாங்க ..!!
//மதுரை சரவணன் said...
நல்ல சிந்தனை.. மல்லாக்கபடுத்த இன்னும் நல்லா யோசிக்கலாம்.... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்//
கருத்துக்கு நன்றீங்க.
//Chitra said...
http://en.wikipedia.org/wiki/Fire_apparatus
..... :-)//
link கொடுத்தத்துக்கு நன்றிங்க
//வெறும்பய said...
யப்பா.. என்ன ஒரு கண்டுபிடிப்பு...//
என்ன பண்றது ஜெயந்த், நம்ம சேவை உலகுக்கு தேவை.
///ப.செல்வக்குமார் said...
// தண்ணிக்குள்ள தான்//
தண்ணிக்கு மேல இருக்கும் ..!!///
தண்ணிக்கு மேல இருந்தா மிதக்க முடியாது செல்வா.
///ப.செல்வக்குமார் said...
// இதைவிட சரியான விளக்கம் தெரிந்தவர் யாரேனும் இருப்பின் பின்னூட்டம் மூலமாக தெரியப்படுத்தலாம். வரவேற்க்கப்படுகிறீர்கள்.//
ஒருநாள் ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாடப்போனார். அப்போ அங்க ஒரு சிங்கம் வந்தது. அதைப்பார்த்த ராஜா பயந்து போய்ட்டார்.உடனே அவருக்கு யார உதுவிக்கு கூப்பிடறது அப்படின்னு சந்தேகம். அதனால உடனே அவருக்கு ஒரு யோசனை தோணிச்சு. அதனால தீயணைப்பு வண்டிக்கு சிவப்பு கலர் வச்சுட்டாங்க ..!!///
லாஜிக் பொருந்தலையே.
பதிவு ஏதாவது போட்டிருப்பீங்கன்னு வந்தேன்.
முதன் முதலாவே இப்பிடியொரு உலக அலசல் இருக்கும்ன்னு நினைக்கல அன்பு.
வாழ்த்துகள்.தொடர்ந்தும் வருவேன்.
என்ன நாஞ்சொல்றது, சரி தானே?///
ம்ம்..
தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...
http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html
//என்ன நாஞ்சொல்றது, சரி தானே?//
irukkalaam
@ ஹேமா
@ அஹமது
@ பித்தன்
அனைவருக்கும் நன்றி.
ஹா ஹா ஹா....அடடா... என்னமா சிந்திக்கிறீங்க... எனக்கு ஒரு டவுட்...
உங்கள இப்படி எல்லாம் சந்தேகம் கேக்க சொல்லி யாருங்க அடிக்கிறாங்க..?? :-))))
நீங்க சொல்றது, சரி தான் உங்களுக்கு இன்னும் நிறைய சந்தேகம் வரட்டும்
இப்படி எல்லாம் கூட யோசிக்கலாமா..
//Ananthi said...
ஹா ஹா ஹா....அடடா... என்னமா சிந்திக்கிறீங்க... எனக்கு ஒரு டவுட்...
உங்கள இப்படி எல்லாம் சந்தேகம் கேக்க சொல்லி யாருங்க அடிக்கிறாங்க..?? :-))))//
என்னோட சொந்த மூளைங்க..
//சௌந்தர் said...
நீங்க சொல்றது, சரி தான் உங்களுக்கு இன்னும் நிறைய சந்தேகம் வரட்டும்//
நன்றி.
//ரிஷபன் said...
இப்படி எல்லாம் கூட யோசிக்கலாமா..//
இப்படியும் யோசிக்கலாம்.
முடியல நண்பா..இன்னும் உங்க கிட்ட நிறைய எதிர்ப் பார்க்கிறோம்..
//padaipali said...
முடியல நண்பா..இன்னும் உங்க கிட்ட நிறைய எதிர்ப் பார்க்கிறோம்..//
கண்டிப்பா உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் படைப்பு.
எப்புடியெல்லாம் யோசிக்கிறிங்ப்பா..
//ம.தி.சுதா said...
எப்புடியெல்லாம் யோசிக்கிறிங்ப்பா..//
எல்லாம் உலகஞானம் தாங்க.
Post a Comment