Pages

Monday, April 19, 2010

நான்

நான் யார்?

எனக்கு நீண்ட நாட்களாகவே என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆசை. எனவே இந்த கேள்வியை பல பேரிடம் கேட்டேன். அதற்க்கு விதவிதமான பதில்களும் வந்தன. அவற்றை வைத்து என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்த பதில்கள் இதோ.

அம்மா : ரொம்ப அழகான தங்கமான பையன்.
அப்பா : புத்திசாலி பையன்.
அக்கா : ஸ்மார்ட் பாய்.
நண்பன் : நல்லவன் தான்.
பாஸ் : இன்னும் வளர வேண்டிய பையன்.
தோழி : போடா லூசு.
காதலி : கிரேஸீ பாய்.

இந்த மாதிரி பதில்கள் வந்தால் நான் என்னத்தை எடுத்துக்கிறது?

Friday, April 9, 2010

சுற்றுலா

சமீபத்தில் நண்பர்களோடு ஒரு சுற்றுலாக்கு சென்று வந்தேன்.
மஹாபலீஸ்வர், அஜந்தா குகைகள், எல்லோரா குகைகள் என மூன்று இடங்களுக்கு சென்று வந்தோம்.
மொத்தம் பதிமூன்று பேர் சென்றிருந்தோம். மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது.



மஹாபலீஸ்வர்:
மஹாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹில் ஸ்டேஷன் தான் இது. தரையில் இருந்து 4439 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கண்ணுக்கு குளிர்ச்சியாக சில்லென்று இருந்தது. நாங்கள் சென்றிருந்த போது ஷ்ட்ராபெர்ரி திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் ஷ்ட்ராபெர்ரி அதிகமாக விளைவதால் அதனை மக்களிடையே பிரபலப்படுத்த வருடா வருடம் நடைபெறும் திருவிழா தான் ஷ்ட்ராபெர்ரி திருவிழா.



அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் :
இவை இரண்டும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளன. அஜந்தாவில் 30 குகைகளும் எல்லோரவில் 34 குகைகளும் உள்ளன. புத்த மதம் பற்றிய தகவல்கள் நிறைந்ததாகவே அமைந்திருந்தன அனைத்து குகைகளும்.



படங்களுக்கு கீழே கிளிக்கவும்.
போட்டோ 1
போட்டோ 2