Tuesday, July 5, 2011
விடை தெரியாக் கேள்விகள் சில...
* வயசுப் பிள்ளைங்க தவறு செய்யும் போது உடனே அதட்டும் பெற்றோர் யாரும் நாமும் இவ்வயதில் இப்படித்தானே இருந்தோம் என உணர்ந்து அணைப்பதில்லையே???
* எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் அரசியலில் குதித்து ஒரு பதவிக்கு வந்தவுடன் தன் சுயம் இழந்து விடுவதேன்???
* வீட்டில் அனைவரும் ஒன்றாய் அம்ர்ந்திருக்கையில் செல்லமகள் கேட்பாள் " அப்பா செத்ததுக்கு அப்புறம் நாம எங்க போவோம்???"
* பணம் அதிகமாக வைத்திருக்கும் எவருக்கும் தானம், தர்மம் போன்றவற்றில் ஈடுபாடு இருப்பதில்லை. ஏன்???
* என்னதான் தத்துவம் பேசினாலும் வருமானவரி கட்டும்போது போலி ரசீதுகளை சேகரித்து வரியை குறைக்க முயல்வதேன்???
* என்னதான் நெருக்கமான நட்பாயினும், அவர்களை பார்க்கும்போது அவர்கள் என்றோ நம்மிடம் கடனாக வாங்கிய பணம் கண்முன் வந்து போவதேன்???
* என்னதான் உருக உருக காதலித்தாலும் திருமணத்துக்கு பிறகு நிலை தலைகீழாவதேன்???
* எவ்வளவு அழகான சினிமா நடிகையும் சில கோணங்களில் பார்க்கையில் பயமுறுத்துவதேன்???
Sunday, February 27, 2011
ஆத்தாடி
கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் சில காகிதங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த போது ஒரு டாக்குமெண்ட் பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு மனிதர் தனது பெயருக்கு பின்னால் 30க்கும் மேற்பட்ட எழுத்துக்களை வைத்திருந்தார். நாமெல்லாம் ஒரு படிப்ப முடிக்கறதுக்குள்ளயே தட்டுத்தடுமாறிப் போயிடறோம். எப்படித்தான் இப்படியோ??? (தலைப்ப இன்னொருமுறை படிச்சு பாத்துக்கோங்க)
ஒரு சர்தார் வீட்டுல பூனை ஒண்ணு ரொம்ப நாளா தொல்லை பண்ணிட்டு இருந்தது. ஒரு நாள் அவர் அதைக் கொண்டுபோய் ஊருக்கு வெளில விட்டுட்டு வந்தார். வீட்டுக்கு வந்தபோது அவருக்கு முன்னால பூனை வந்திருந்தது. அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் தூரம் அதிகமா கொண்டுபோய் விட்டுட்டு வந்தார். ஆனா பாருங்க இந்தமுறையும் பூனை அவருக்கு முன்னால வீட்டுக்கு வந்திருந்தது. ரொம்ப கோபமா அதைத் தூக்கிட்டு ஊரைவிட்டு பல மைல் தொலைவில் விட்டுவருவதாக சென்றார். கொஞ்ச நேரத்தில் அவரது மனைவிக்கு ஒரு கால் வந்தது. சர்தாரேதான்.
சர்தார் : அந்த சனியன் புடிச்ச பூனை அங்க இருக்கா?
மனைவி : ஆமாங்க.
சர்தார் : அதை இங்க அனுப்பு. நான் வீட்டுக்கு வர்ற வழியை மறந்து தொலைச்சிட்டேன்.
மனைவி : ?????
Saturday, February 12, 2011
எந்தாயி
வேலைக்கு போயிட்டு வந்து
அக்கடான்னு நீ உக்காரையில
ஃபீஸ் கட்டணும்பேன்
ஒடனே முந்தான முடிப்புலருந்து
ரூவா தருவியே அதுக்காகவாவது,
ஊர சுத்திட்டு நான் வரைல
நீ சாப்பிடரத பாத்து
உன் தட்ட புடுங்கிட்டு
வேற போட்டுக்கோம்பேன்
நாஞ்சாப்பிட வரைல சும்மா இருந்திட்டு
அப்பறம் சொல்லுவியே
சாப்பாடு முடிஞ்சிதுன்னு அதுக்காகவாவது,
கண்ணாடி பாத்து நாந்தல சீவயில
பின்னாலிருந்து திடும்னு தலைக்கு
எண்ண தேச்சு விடுவியே அதுக்காகவாவது,
வீட்டுல கறி சமைச்சா யாருக்கும் தெரியாம
சோத்துக்குள்ள மறச்சு ரெண்டு துண்டு
அதிகந்தருவியே அதுக்காகவாவது,
ராவுல நான் குளிருல
நடுங்கையில கேக்காமலே
போத்தி விடுவியே அதுக்காகவாவது
இன்னொருக்கா ஓன்வகுத்துலயே
பொறக்கோணுந்தாயி!