பூக்களை ரசித்த தருணங்களில்
உன் புன்னகையால் நினைவூட்டினாய்!
தேன் உண்ணும் போதெல்லாம்
உன் குரலால் நினைவூட்டினாய்!
முத்துக்களை பார்த்த போதெல்லாம்
உன் பற்களால் நினைவூட்டினாய்!
இசையை ரசித்த பொழுதுகளில்
உன் கொலுசொலியால் நினைவூட்டினாய்!
கடவுளை தரிசித்த வேளைகளில்
உன் காந்த புன்னகையால் நினைவூட்டினாய்!
இப்படி எல்லாவற்றிலும்
என் நினைவோடு கலந்த நீ,
ஏன்
என் நிஜத்தோடு
கலக்க மறுக்கிறாய் ?
- அன்பரசன்
2 கருத்துக்கள்:
அன்பரச
கவிதை அருமை - கற்பனை அருமை
நினைவோடு கலத்தல் எளிது
நிஜத்தோடு கலத்தல் அரிது
விரைவினில் கலக்க நல்வாழ்த்துகள்
கலக்க நானும் முயற்சிக்கிறேன்
Post a Comment