Pages

Sunday, March 28, 2010

அன்றும் இன்றும்

அன்று : ஒவ்வொருவரிடமும் ஒன்று, இரண்டு என சேகரித்து சினிமா பார்த்தோம் நண்பர்களோடு.
இன்று : ஏசி தியேட்டரில் சில நூறு செலவழித்து படம் பார்க்கிறோம் நண்பர்களோடு.
==========================================================================
அன்று : வீட்டில் அம்மா சண்டையிட்டதால் சாப்பிட்டோம்.
இன்று : நல்ல சாப்பாட்டுக்காக வீட்டையே மாற்ற வேண்டிய நிலைமை.
==========================================================================
அன்று : பாக்கெட் மணியாய் கிடைத்த சில பத்துகள் அளவாக இருந்தது.
இன்று : வாங்குகின்ற பல ஆயிரம் ரூபாய்கள் பற்றவில்லை.
==========================================================================
அன்று : பத்து ரூபாய் ரீசார்ஜ் செய்ய படாத பாடு பட்டோம்.
இன்று : பத்தாயிரம் ரூபாய் லிமிட்டில் போஸ்ட்பெய்டு சிம் கையில்.
==========================================================================
அன்று : கல்லூரியில் படித்து கொண்டிருந்த ஒரு சராசரி மாணவன்.
இன்று : பல ஆயிரம் சம்பளம் பெரும் ஒரு புரபசனல்.
==========================================================================
அன்று : எப்போதும் குதூகலம், மகிழ்ச்சி, ஆனந்தம்.
இன்று : எல்லாம் இருக்கின்ற மாதிரி இருந்தாலும் அந்த ஏதோ ஒன்று மட்டும் மிஸ்ஸிங்.
==========================================================================

இப்படிக்கு,
பணத்திற்க்காக இளமையை தொலைத்து கொண்டிருக்கும் ஒரு வாலிபன்

1 கருத்துக்கள்:

Chitra said...

இப்படிக்கு,
பணத்திற்க்காக இளமையை தொலைத்து கொண்டிருக்கும் ஒரு வாலிபன்

..... ரொம்ப feel பண்ணி, எழுதி இருக்கீங்கன்னு தெரியுது.