
எனக்கு நீண்ட நாட்களாகவே என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆசை. எனவே இந்த கேள்வியை பல பேரிடம் கேட்டேன். அதற்க்கு விதவிதமான பதில்களும் வந்தன. அவற்றை வைத்து என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்த பதில்கள் இதோ.
அம்மா : ரொம்ப அழகான தங்கமான பையன்.
அப்பா : புத்திசாலி பையன்.
அக்கா : ஸ்மார்ட் பாய்.
நண்பன் : நல்லவன் தான்.
பாஸ் : இன்னும் வளர வேண்டிய பையன்.
தோழி : போடா லூசு.
காதலி : கிரேஸீ பாய்.
இந்த மாதிரி பதில்கள் வந்தால் நான் என்னத்தை எடுத்துக்கிறது?