ஒரு நாள் பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களிடம் கொஞ்சம் தக்காளிகளை ஒரு பையில் எடுத்து வர சொன்னார். ஒவ்வொரு மாணவரும் தனக்கு பிடிக்காத அல்லது தான் வெறுக்கும் மாணவர்களை நினைத்து கொண்டு வர வேண்டும். எத்தனை தக்காளி உள்ளதோ அத்தனை பேரை பிடிக்கவில்லை என்று அர்த்தம். ஒவ்வொருவரும் இரண்டு, மூன்று எனவும், சிலர் ஐந்து கூடகொண்டு வந்திருந்தனர்.
ஒரு வாரம் வரையில் அவர்கள் எங்கு சென்றாலும் கூடவே தக்காளிகளை எடுத்து செல்லும்படி கூறினார். ஓரிரு நாட்களிலேயே மாணவர்கள் துர்நாற்றம் வீசுவதாகவும், அழுகிப்போய் எடுத்து செல்ல சிரமமாக இருப்பதாகவும் புகார் செய்ய தொடங்கினர்.
ஒரு வாரம் கழித்து "எப்படி இருந்தது இந்த ஒரு வாரம்?" என ஆசிரியை கேட்டார்.
மாணவர்கள் திரும்பவும் துர்நாற்றம் மற்றும் எடுத்து செல்வதில் இருந்த சிரமம் பற்றியும் சொன்னார்கள். அதற்கு ஆசிரியை சொன்னார் "இந்த பிரச்சனையும் மற்றவர் மேலுள்ள வெறுப்பை போலவே தான். அந்த வெறுப்பானது உங்களை பலவீனமாக்கிவிடும். கெட்டுப்போன தக்காளியின் துர்நாற்றத்தை ஒரு வாரம் பொறுக்க முடியவில்லையே. நினைத்து பாருங்கள் உங்கள் ஒவ்வொருவர் மனத்திலும் இருக்கக்கூடிய கனத்தை."
நாம் மனசு ஒரு அழகான பூந்தோட்டம், எனவே அதற்கு சீரான இடைவெளியில் களை எடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நடக்காதவர்களை மன்னித்து விடுங்கள் மற்றும் தவறாக நடந்த விசயங்களை மறந்து விடுங்கள். அவ்வாறு செய்வதனால் பல நல்ல விசயங்களை பதிவு செய்ய தேவையான இடமும் கிடைக்கும்.
மறப்போம்! மன்னிப்போம்! வளமாக வாழ்வோம்!
13 கருத்துக்கள்:
நாம் மனசு ஒரு அழகான பூந்தோட்டம், எனவே அதற்கு சீரான இடைவெளியில் களை எடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நடக்காதவர்களை மன்னித்து விடுங்கள் மற்றும் தவறாக நடந்த விசயங்களை மறந்து விடுங்கள். அவ்வாறு செய்வதனால் பல நல்ல விசயங்களை பதிவு செய்ய தேவையான இடமும் கிடைக்கும்.
..... nice message.... :-)
நல்ல கருத்து நண்பரே...
அருமையான உள்ளடக்கத்துடன் கூடிய கதை.
வாழ்த்துகள் நண்பரே
நல்ல படைப்பு நண்பரே
அருமை
nallla kathai nanpare vaalththukkal
வருகைக்கு நன்றி நண்பர்களே!
மன்னிப்பு கிடைக்கும்போது விட கொடுக்கும்போது அதிக சந்தோசம் அளிக்கும் ஒன்று!
நாம் மனசு ஒரு அழகான பூந்தோட்டம், எனவே அதற்கு சீரான இடைவெளியில் களை எடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நடக்காதவர்களை மன்னித்து விடுங்கள் மற்றும் தவறாக நடந்த விசயங்களை மறந்து விடுங்கள். அவ்வாறு செய்வதனால் பல நல்ல விசயங்களை பதிவு செய்ய தேவையான இடமும் கிடைக்கும்.
////
அழகான விடயம்
எளிமைய இருந்துச்சு
அன்பை மட்டுமே விதைப்போம்
பகிர்வுக்கு நன்றி
நன்றிங்க பிரபு, சுரேஷ் குமார்
அருமையான சிந்தனை அன்பா..
இன்றுதான் உங்கள் பதிவை படித்தேன் ... இதைபோன்று நல்ல சிந்தனைகளை தொடருங்கள் ...
நன்றி செந்தில் அண்ணே!
அன்பின் அன்பரச
நல்ல கருத்து - கதையும் அருமை - கடைப்பிடிக்க வேண்டிய நல்ல குணம்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நன்றிங்க சீனா அய்யா.
Post a Comment