Pages

Friday, October 22, 2010

சுறுசுறுப்பு

விடியகால நாலர மணி. அம்மா கொரலு "கண்ணு, எழுந்திரிப்பா. வெதப்புக்கு ஆள் கூப்புட்டுருக்கோம். காப்பிய குடிச்சுட்டு வெளிய போயிட்டு வந்து சோளத்த பையில கட்டி வையி". மொகங்கழுவி காப்பித்தண்ணிய குடிச்சுட்டு வெளிய போயிட்டு வந்து சாமத்துல ரெண்டு மணிக்கு ஊறப்போட்ட சோளத்த தண்ணி வடிச்சு பையில கட்டி முடிச்சா மணி அஞ்சரை ஆயிருச்சு.

அப்படியே ஒரம், சோளத்த வண்டில ஏத்தி ஆளுங்களையும் அனுப்பிட்டு பாத்தா மணி ஆறு. அப்புறமா கட்டுத்தொறக்கு போயி ரெண்டு உருப்புடியோட சாணி வழிச்சு கட்டுத்தொறய கூட்டி சுத்தம் பண்ணி பால கறந்து முடிச்சுட்டு மாட்டுக்கும் கன்னுக்கும் தண்ணி கட்டி தீனி போட்டுட்டு பால் கேன எடுத்துட்டு போயி கடையில ஊத்திட்டு பாத்தா மணி ஏலு.

அதுக்கப்புறமா அவசர அவசரமா ஒருவாயி கரசோறு குடிச்சிட்டு தண்ணிக்கொடம் எடுத்துக்கிட்டு காட்டுக்கு போனா அங்க ஒரம் சோளம்-லாம் ஒரே எடத்துல கெடக்கு. அதையெல்லாம் வெதப்புக்கு தகுந்த மாதிரி அங்கங்க பிரிச்சு வச்சுட்டு ஆளுங்களுக்கு தீர தீர ஒரம் சோளம் அப்பறம் எடஎடயே தண்ணி கொடுத்து முடிச்சா மணி பத்து.

அப்பறம் அங்க அம்மா கையில பெனஞ்ச சோறு ஒருவாயி சாப்புட்டு மூணு மணி வரைக்கும் ஆளுங்களுக்கு தேவயான ஒரஞ்சோளம் எடுத்துட்டு ஏர் கூடவே நடந்து, எடைல யாருக்காது மாத்திவுட்டு இப்படியா வெதப்பு முடிச்சு வீடு கெளம்பியாச்சு. வீடு போனதுக்கு அப்பறம் நல்லா கரசமண்ணு போக தேச்சு குளிச்சா மணி நாலரை.

மாடு கன்னுல்லாம் காலைலருந்து கட்டியே கெடக்கும். அதுக்கு போயி புல்லறுத்து கொண்டாந்து போட்டுட்டு வீடுவந்து கட்டல்ல சாஞ்சா மணி அஞ்சர. ஒரு ஆறு மணிக்காட்ட போயி பால் கறந்து கொண்டாந்து கடையில ஊத்திட்டு ஊட்டுக்கு வந்தா மணி ஏழு.

அப்பறம் காலைல இருந்து பாக்காத நம்ம பசங்கள பாக்கறதுக்கு ஒரு ரவுண்டு போயிட்டு நாயம் பேசிட்டு வந்தா மணி எட்டர. அதுக்கும்பொறவு சாப்பாடு சாப்புட்டு கொஞ்சநேரம் கதையடிச்சுட்டு மறுநாள் வெதப்புக்கு தேவயான சோளப்பைய எடுத்து பிரிச்சு தனியா வச்சுட்டு வந்து கயித்துக்கட்டல எடுத்து வாசல்ல போட்டு அக்கடான்னு படுத்தா மணி பத்து.
இவையனைத்தும் என் கண்முன் நிழலாடியது இன்று காலை நான்காம்முறையாக அலாரத்தை "ஸ்னூஸ்" செய்தபோது.

20 கருத்துக்கள்:

Kousalya said...

ம்....நல்லா இருக்குங்க உங்க ஊர் ஞாபகம்...!

அருண் பிரசாத் said...

:) அருமை

வெறும்பய said...

நல்லா இருக்கு..

Chitra said...

அழகிய ஊர் - அருமையான பதிவு. :-)

சிவசங்கர். said...

Anbu--
Yenakkeellaam avvap pothu indha gnayabakam romba varuthu....
Pesaama oorppakkam poyi maadu meikkalaamnu irukken....
Nice Accent!
Itha paththi oru kavithai kooda yezhuthirukken...
Paaru!

http://kaadhalkurudan.blogspot.com/2010/10/blog-post_5262.html

ப.செல்வக்குமார் said...

நடுவுல நடுவுல காப்பி குடிப்போம்ல .. அதைய சொல்லவே இல்ல .
ஆனா நல்லா இருக்கு ..

Balaji saravana said...

ஊர் வழக்கு நல்லா இருக்கு பாஸ்!

பதிவுலகில் பாபு said...

ஊர் ஞாபகம் வந்துடுச்சாங்க அன்பரசன்..

நல்லாயிருக்கு..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லாருக்கு

எஸ்.கே said...

அழகிய நினைவுகள்! அருமை!

வினோ said...

அருமையான நினைவுகள்...

அன்பரசன் said...

@ கௌசல்யா
@ அருண் பிரசாத்
@ வெறும்பய
@ சித்ரா
@ சிவசங்கர்
@ ப.செல்வக்குமார்
@ பாலாஜி சரவணா
@ பதிவுலகில் பாபு
@ ஆர்.கே.சதீஷ்குமார்
@ எஸ்.கே
@ வினோ

எல்லோருக்கும் நன்றி.

Sriakila said...

nice!

கே.ஆர்.பி.செந்தில் said...

எங்கூருக்கு போயிட்டு வந்தாப்ல இருக்கு.. அலாரம் அடிக்கிற மாதிரிதான் ஊர் நெனப்பும்...

ரிஷபன் said...

அப்படியே எங்க கிராமம் போயிட்டேன் மனசுல..

மகேஷ் : ரசிகன் said...

ஃபீலிங்க்ஸா பாஸு... ?

மோகன்ஜி said...

ஊர் நினைப்பும் தாய்மடி ஞாபகமும் ஒண்ணு தானே?
நல்ல பதிவு அன்பரசன்!

மதுரை சரவணன் said...

oor ninaibbu nalla vanthullathu. vaalththukkal.

அன்பரசன் said...

@ ஸ்ரீஅகிலா
@ கே.ஆர்.பி.செந்தில்
@ ரிஷபன்
@ மகேஷ் : ரசிகன்
ஆமாங்க
@ மோகன்ஜி
@ மதுரை சரவணன்

வருகைக்கு நன்றி நண்பர்களே.

Anonymous said...

என்னையும் உங்களோடு,உங்கள் எழுத்துக்களோடு கிராமத்திற்கு அழைத்து சென்றீர்கள்...அருமை..பழைய நினைவுகள் வந்துவிட்டன.படிக்கும்போது..