Tuesday, January 26, 2010
பெண்கள் ஹாக்கி
ஹாக்கி!
இந்தியாவின் தேசிய விளையாட்டு.
பெயரைக்கேட்டாலே ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்வான்.
ஆண்கள் ஹாக்கியில் அதிக கவனம் செலுத்தும் இந்திய ஹாக்கி சம்மேளனம் பெண்கள் ஹாக்கி பற்றி கண்டு கொள்வதே இல்லை.வீராங்கனைகள் மே2008 முதல் இன்று வரை சம்பளம் கிடைக்காமலேயே விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் அரசு கொடுத்த ஒரு கோடி ரூபாயை ஆண்கள் அணி வீரர்களுக்கு சம்பளமாக கொடுத்து விட்டனர். அது மட்டுமின்றி மகளிர் அணிக்கு எந்த ஸ்பொன்செர்ஷிப்பும் கிடையாது. அணியின் பலர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.சம்பளமின்றி ஏழ்மையான குடும்ப சூழலில் ஒன்றரை வருடம் சமாளிப்பது எளிதான காரியம் அல்ல
.
பொறுத்து பொறுத்து பார்த்த அவர்கள் இறுதியாக ஒரு வங்கியில் கூட்டுக்கணக்கு தொடங்கியுள்ளனர். அதில் பொதுமக்கள் யார் வேண்டுமாலும் பணம் போடலாம். பின்பு அந்த பணம் அணியில் உள்ள எந்த வீராங்கனைக்கும் அவசர நேரத்தில் கொடுக்கப்படும்.
ஏன் இவ்வாறு செய்தீர்கள் என கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் இதோ "நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. சம்பளம் தராவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் விளையாட தேவையான அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுங்கள். அவசர நேரத்தில் எங்களுக்கு தேவையான பண உதவி செய்யுங்கள். அது போதும்"
ஹாக்கியில் இந்தியாவின் பெயர் சர்வதேச அளவில் புகழ் பெற வேண்டுமெனில் இத்தகைய பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.
இந்திய ஹாக்கி சம்மேளனம் இனிமேலாவது ஏதாவது நடவடிக்கை எடுக்குமா?
4 கருத்துக்கள்:
எப்பவும் ஓர வஞ்சனை தான். என்று தான் திருந்துவாங்களோ? நல்லது சீக்கிரம் நடக்கட்டும் - விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முகமாக.
என்னமோ தெரியல.... கிரிக்கெட்டுக்கு கொடுக்குறதுல பத்துல ஒரு பகுதி கூட இவங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. வேதனையான விஷயம்.
பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே.
http://thisaikaati.blogspot.com
சந்தேகம்தான்.. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
நன்றிங்க சித்ரா, ரோஸ்விக் மற்றும் அண்ணாமலை.
கடந்த வெள்ளி அன்று மத்திய பிரதேச முதல்வர் திரு ஷிவ்ராஜ் சிங் சௌகான் அவர்கள் பெண்கள் அணிக்காக ரூ73லட்சம் கொடுத்துள்ளார்.
அவர்க்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறென்.
Post a Comment