என்னை காதலிக்க சொல்லி
கெஞ்ச விருப்பமில்லை!
நீ என்னை காதலிப்பதாக எதிர்பார்த்தால்
அதில் தவறொன்றும் இருக்க போவதில்லை!
உன் கையை பிடிப்பதாக கனவு கண்டால்
அது என்னை மட்டுமே பாதிக்குமே ஒழிய உன்னை அல்ல!
உன்னை பார்க்கும் தருணங்களில்
ஒளிரும் என் கண்களை
கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன்!
சத்தியமாக நீ ஹலோ சொல்லும் போது
வித்தியாசமாக புன்னகைக்க மாட்டேன்!
ஆனால்
உன்னை காதலிக்காமல் மட்டும் இருக்க சொல்லாதே!
இருக்க மாட்டேன்!!
இறந்து விடுவேன்!!!
- அன்பரசன்
2 கருத்துக்கள்:
:-) nice.
நன்றீங்க சித்ரா மேடம்
Post a Comment