Tuesday, August 31, 2010
ரெண்டாங்கிளாஸ்
ஹையா... இன்னிக்கு நான் ஒண்ணாங்கிளாசுல இருந்து ரெண்டாங்கிளாசுக்கு போறேன். ஒண்ணுமே புரியலயா? ஆச்சுங்க இன்னியோட ஒரு வருசம் நானும் காலத்தில் இறங்கி. நானும் ஒரு வருசமா எழுதுறேன் அப்படின்னு நினைக்கும்போது எனக்கே பெருமையா இருக்கு. ஏதோ அவ்வப்போது தோன்றதை கிறுக்கிட்டு இருந்தேன். அதையே எழுத்து வடிவாக்கி பார்த்தபோது என்ன பெருமிதமா இருந்துச்சு தெரியுமா?
இந்த ஒரு வருசத்துல நான் நிறைய மாற்றங்களை சந்திச்சு இருக்கேன்(எல்லாமே நல்ல வழியிலதாங்க). அதற்காக பதிவுலகில் நான் படித்த எல்லா பதிவர்களுக்கும் என்னை படித்த எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன்.
இந்த ஒரு வருச காலத்துல நான் எழுதியது மிகவும் குறைவு என்றாலும் எனக்கு கிடைத்த சந்தோசத்துக்கு அளவே இல்லை. அதற்கு நேரமின்மை, வேலைப்பளு மற்றும் இணைய வசதியின்மை என பல காரணங்கள் உண்டு. நான் எழுதிய பதிவுகளை போலவே எனக்கு கிடைத்த நண்பர்களும் குறைவு. ஏனெனில் ஆரம்ப காலங்களில் நான் எனது பதிவுகள் எதையுமே திரட்டிகளில் இணைத்ததில்லை. சொல்லப்போனால் எனக்கு அவற்றை பற்றி தெரியவும் இல்லை. ஒரு பத்து நாட்களுக்கு முன்புதான் திரட்டிகளில் இணைந்தேன்.இனிவரும் காலங்களில் அதிகமாக எழுதி நட்பு வட்டத்தை விரிக்க முடியும் என் நம்புகிறேன்.
என்னையும் மதிச்சு எனக்கு முதல் பின்னூட்டம் இட்ட நண்பன் ராஜூ மற்றும் முதல் பாலோயராக சேர்ந்த சீனா அய்யா அவர்களுக்கு முதல் நன்றிகள். எனது பாலோயர்களாக இருக்கும் சீனா, சித்ரா சாலமன், நிகே, தேவன் மாயம், விஜய், அம்பிகா, கே.ஆர்.பி.செந்தில், ஜில்தண்ணி - யோகேஷ், பனித்துளி சங்கர், எஸ்.கே, மலாக்கா முத்துக்கிருஷ்ணன், வெறும் பய, வால்பையன், செந்தில், நிஸ் (ராவணா), பதிவுலகில் பாபு, பிரியமுடன் ரமேஷ், ஜோதிஜி அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அடிக்கடி பின்னூட்டம் இட்ட சீனா அய்யா மற்றும் சித்ரா மேடம் இருவருக்கும் சிறப்பு நன்றிகள். மேலும் அவ்வப்போது வந்து பின்னூட்டம் இட்ட ராஜூ, லோகு, முரளிகுமார் பத்மநாபன், நிகே, பிரியமுடன் வசந்த், தேவன் மாயம், காயத்ரி, ரோஸ்விக், அண்ணாமலையான், ஆதிமூலகிருஷ்ணன், இல்லுமினாட்டி, ப்ரியா, விக்னேஷ்வரி, கலாநேசன், அம்பிகா, முனியாண்டி, ஜில்தண்ணி-யோகேஷ், கே.ஆர்.பி.செந்தில், நிகழ்காலத்தில், வேலு ஜி, நந்தா ஆண்டாள்மகன், எஸ்.கே, பிரியமுடன் பிரபு, மோகன், பிரியமுடன் ரமேஷ், பதிவுலகில் பாபு, படைப்பாளி மற்றும் அஹமது என அனைவருக்கும் நன்றிகள். சமீப காலமாக அடிக்கடி பின்னூட்டம் இட்ட வெறும்பய ஜெயந்த்க்கும் நன்றி.(வயதில் மூத்த பதிவர்கள் மன்னிக்கவும், ஏனெனில் அண்ணன், தம்பி, நண்பர், சார் போன்ற அடைமொழி இல்லாமல் வெறும் பெயர்களை மட்டுமே எழுதிவிட்டேன்.)
சித்ரா மேடமுக்கு தனியே ஒரு தேங்க்ஸ், ஏன்னா நான் என்ன எழுதினாலும் அதற்கு உடனே பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தியதற்காக.
இன்னிக்கு பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் என் கல்லூரி நண்பன் மணிகண்டனுக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
ரொம்ப நேரமா நன்றி சொல்லி சொல்லி வாய் வலிக்குதுங்க. அதனால ஒரு ரெஸ்ட் தேவை. மீண்டும் சந்திப்போம்.
டிஸ்கி : இன்னிக்கு நான் ஒண்ணாங்கிளாசுல இருந்து ரெண்டாங்கிளாசுக்கு போறேன். பாஸா? பெயிலா? நீங்கதான் சொல்லணும். சொல்லுவீங்களா?..
19 கருத்துக்கள்:
Congrats..
வாழ்த்துகள் அன்பரசன்
டிஸ்கி : இன்னிக்கு நான் ஒண்ணாங்கிளாசுல இருந்து ரெண்டாங்கிளாசுக்கு போறேன். பாஸா? பெயிலா? நீங்கதான் சொல்லணும். சொல்லுவீங்களா?..
...... PASS ...... PASS........ PASS......
Congratulations!!!!
வாழ்த்துகள் அன்பரசன்!
வாழ்த்துகள்..
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நண்பருக்கு...மென்மேலும் வளர,வெற்றி மேல் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்...
///ஒரு பத்து நாட்களுக்கு முன்புதான் திரட்டிகளில் இணைந்தேன்.இனிவரும் காலங்களில் அதிகமாக எழுதி நட்பு வட்டத்தை விரிக்க முடியும் என் நம்புகிறேன்.///
எழுதுங்க எழுதுங்க .. கோமாளியின் நட்பு உங்களுக்கு எப்போதும் உண்டு ..
//இன்னிக்கு நான் ஒண்ணாங்கிளாசுல இருந்து ரெண்டாங்கிளாசுக்கு போறேன். பாஸா? பெயிலா? நீங்கதான் சொல்லணும். சொல்லுவீங்களா?..//
பாசுதான் ஆனா முட்டாய் குடுக்கணுமே ..?
வாழ்த்துகள் அன்பா ..
@ அஹமது
@ வானம்பாடிகள்
@ Chitra
@ ராஜாராம்
@ ஜெயந்த்
@ படைப்பாளி
@ கே.ஆர்.பி.செந்தில்
வரவுக்கு நன்றிங்க
@ செல்வக்குமார்
*****
பைவ் ஸ்டார் சாக்லேட் உங்களுக்காக..
எடுத்துக்கோங்க.
ஒரு வருசம்...நீண்ட பயணம்... வாழ்த்துக்கள். உங்களுக்கு ஃபாலோவர் ஆகிட்டேன்:)
நன்றிங்க ஜெய்
பாசாயிட்டீங்கோ......ஓ ஓ ஓ ஓ ஓ ..........
வாழ்த்துக்கள் அன்பரசன்..
நன்றிங்க யோகேஷ், பாபு
தங்கள் பயணம் இன்னும் இனிமையாக தொடர என் வாழ்த்துக்கள்!
நன்றி சுரேஷ்
அன்பின் அன்பரச
இரண்டாம் ஆண்டில் தகுதியுடன் பெருமையுடன் அடி எடுத்து வைத்தமைக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நன்றிங்க சீனா அய்யா
Post a Comment