நான் இறந்து போயிருந்தேன்
நீ என்னை விடுத்து
மாற்றானின் கரம் பிடித்த அந்தப்பொழுதில்..
எத்தனை எளிதாய்
மறந்து விட்டாய் அத்தனையையும்!!
உன்னை மறக்கச்சொல்லி
வழக்கமான கதையாய் மாற்றிவிட்டாயே
நம் உன்னத காதலை..
எவ்வளவு ஆத்திரப்பட்டேன் தெரியுமா அன்று..
என்னுள் எறிந்த தீ சொல்லிட்று
உன்னை அடைய
அவள் கொடுத்து வைக்காதவள் என்று...
உனக்காக நான்
தாடி வளர்க்க போவதில்லை.
குடிக்க போவதில்லை.
உன் பெயரை உளறிக்கொண்டு திரியப்போவதில்லை.
மாறாக உன் முன்னால்
நல்வாழ்வு வாழ்ந்து காட்டப்போகிறேன்..
இது சாபமல்ல சபதம்..
இதோ தொடங்கி விட்டேன்
பயணத்தை
எனக்கான என் விடியலை நோக்கி...
பி.கு : பாரத் என்கிற நண்பரின் பின்னூட்டம் காரணமாக ஒரு சிறு முயற்சி.
[பாரத்... பாரதி... said...
"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...]
23 கருத்துக்கள்:
உன்னால் முடியும் தம்பி தம்பி
உலகம் இருக்கு உன்னை நம்பி
கவிதை அருமை.. ஆனா நீங்களுமா இந்த தலைப்பில் ?
நன்றி அன்பரசன் அவர்களே . கவிதை அருமை. ஆனால் காதல் கவிதையாக மாற்றியது ஏனோ ?
இங்கே பின்னூட்டமிட்டுள்ள வினோ அவர்களுக்கு
இந்த தலைப்பினைக் கொண்டு, வேறு பரிமாணங்களிலும் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள்.
வாய்ப்பிருந்தால் வந்துப் பாருங்கள் http://bharathbharathi.blogspot.com
விடியலை நோக்கிய உங்கள் பயணம் ஜெயிக்க
வாழ்த்துக்கள்..
அன்பு...கவிதை நல்லாயிருக்கு.கரு வேற எடுத்திருக்கலாம் என்பது என் கருத்து.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு இப்படி ஒரு போட்டி பற்றி யாரும் அறிவிக்கவில்லையே !
//"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...//
முடியாது! ஏன்னா, இறந்து போயிருந்தேன் அப்படிங்றதுதான் சரி. இறந்துக்கும் போயிருந்தேனுக்கும் இடையில ஒற்று வராது!
கவிதை நல்லா இருக்கு..
வாழ்த்துக்கள்.. :-)
///உனக்காக நான்
தாடி வளர்க்க போவதில்லை.
குடிக்க போவதில்லை.//
அது சரி .. கவிதை கலக்க தான் இருக்கு ..
இதைத்தானே நம்ம கமல் சொன்னார்
தாவணி போன சல்வார் உள்ளதடா .!
நல்லா இருக்கு கவிதை .............
அழகான வார்த்தைகள்..
தனம்பிக்கையான வரிகள்..
அருமையான கவிதை நண்பா...
இந்த நாள் உன் டைரில குறிச்சு வச்சுக்கோ..
உன்ன விட சூப்பர் பிகர பிக் அப் பண்ணி உனக்கு முன்னாடி வாழ்ந்து காட்டுல..நான் நானாக இல்ல...உங்களுக்காக எக்ஸ்ட்ரா பிட் நான் போட்டுட்டேன் .. ஹா..ஹா..
என்னப்பா இந்த டைட்டில்ல நிறைய பதிவு வர ஆரம்பிச்சிடுச்சு..எங்களை இறந்து போக வெச்சிடாதிங்க
என்னுள் எறிந்த தீ சொல்லிட்று
உன்னை அடைய
அவள் கொடுத்து வைக்காதவள் என்று..//
சூப்பரான வரிகள்..கலக்குங்க..
மாறாக உன் முன்னால்
நல்வாழ்வு வாழ்ந்து காட்டப்போகிறேன்//
அது..........................அது............அது.......அது........அது........
நல்லாயிருக்கு கவிதை..
கவிதை காதல் சவாலுடன் கலந்திருக்கு..
வாழ்துக்கள்
@ யாதவன்
@ வினோ
என்ன பண்றதுங்க.. சவாலாச்சே..
@ பாரத்... பாரதி...
//ஆனால் காதல் கவிதையாக மாற்றியது ஏனோ ?//
மற்ற கருக்களில் ஏற்கனவே சிலர் எழுதி விட்டமையால் இதை எடுக்க வேண்டியதாயிற்று.
@ ஹேமா
//கரு வேற எடுத்திருக்கலாம் என்பது என் கருத்து.//
இது ரொம்ப நாள் முன்னமே எழுதி வைத்திருந்தது. கொஞ்சமாக மாற்றி அமைத்து இப்போது வெளியிட்டு விட்டேன்.
//எனக்கு இப்படி ஒரு போட்டி பற்றி யாரும் அறிவிக்கவில்லையே !//
இருந்தாலேன்ன இப்போது முயற்சியுங்களேன்.
@ பழமைபேசி
சரிதான் நண்பரே..
முதல் வருகைக்கு நன்றி.
@ ஆனந்தி
அனைவருக்கும் நன்றி.
@ பாலாஜி சரவணா
@ அருண் பிரசாத்
@ ப.செல்வக்குமார்
நல்ல ஐடியா..
@ இம்சைஅரசன் பாபு..
முதல் வருகைக்கு நன்றி.
@ படைப்பாளி
எக்ஸ்ட்ரா பிட் சூப்பர் மச்சி.
@ ஆர்.கே.சதீஷ்குமார்
//எங்களை இறந்து போக வெச்சிடாதிங்க//
உங்களை கொன்னுட்டா கமெண்ட், ஒட்டு யாரு போடுவா???
@ பதிவுலகில் பாபு
@ அன்புடன் மலிக்கா
முதல் வருகைக்கு நன்றி.
வரவுக்கு நன்றி நண்பர்களே!
வழக்கமான டெம்பிளேட் கவிதையாக அமைய வாய்ப்புள்ள தலைப்பு..ஆனால் அருமையான கருவை – பெரும்பாலானோர் , நான் உட்பட , சந்தித்த உணர்வுகளை- கவிதையாக தீட்டி இருக்கிறீர்கள்..
நான் படித்த்தும் நினைத்த்து, இதை நான் எழுதி இருக்க வேண்டும் என்றுதான்
உங்களின் இந்த கவிதையை எங்கள் வலைப்பூவில் வெளியீட்டுள்ளோம்.. நன்றி..
ஹேமா அவர்களே நீங்களும் இதே தலைப்பில் முயற்சி செய்யுங்களே...வாய்ப்பிருந்தால் எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
bharathbharathi.blogspot.com
@ பார்வையாளன்
//நான் படித்த்தும் நினைத்த்து, இதை நான் எழுதி இருக்க வேண்டும் என்றுதான்//
:)
@ பாரத்... பாரதி...
வலைப்பூவில் வெளியிட்டமைக்கு நன்றி.
உன் பெயரை உளறிக்கொண்டு திரியப்போவதில்லை.
மாறாக உன் முன்னால்
நல்வாழ்வு வாழ்ந்து காட்டப்போகிறேன்..
..... Super!!! This is the way, it should be. :-)
இதோ தொடங்கி விட்டேன்
பயணத்தை
எனக்கான என் விடியலை நோக்கி...//
சூப்பர் நல்லாயிருக்கு அன்பு..
Post a Comment