Pages

Wednesday, October 27, 2010

எறும்பை ஒழிப்பது எப்படி?


கேள்வி : எறும்பை ஒழிப்பது எப்படி? விரிவாக விளக்குக. [எட்டு மதிப்பெண்கள்]

(இரண்டு மார்க் கேள்வியான இதை எட்டு மார்க்குக்கு கேட்டதைக் கண்டு மிரண்ட ஒரு புத்திசாலி மாணவனின் பதில் இதோ)

பதில் : எந்த ஒரு உயிரையும் கொல்வது எனக்கு பிடிக்காது. இருப்பினும் எட்டு மதிப்பெண்ணுக்காக இன்று எறும்பை கொல்லவேண்டிய கட்டாயத்தில் இதை எழுதுகிறேன்.
எறும்பை கீழ்க்காணும் வழிகளில் கொல்லலாம்.

* கையில் பிடித்து நசுக்கலாம்.
* காலால் மிதித்து கொல்லலாம்.
* விசப்பொடியை தூவி கொல்லலாம்.
* குவாட்டர்ல தண்ணி மிக்ஸ் பண்ணாம கொடுத்து கொல்லலாம்.
* சிகரெட் லைட்டரால பொசுக்கலாம்.
* பிடிச்சு தண்ணிதொட்டில அமுக்கி மூச்சு திணற வச்சு கொல்லலாம்.
* முகத்தில தலையணையை வைத்து அமுக்கி கொல்லலாம்.
* சீனில சயனைடு கலக்கி கொடுத்து கொல்லலாம்.
* பிளேடால துண்டு துண்டா அறுத்து கொல்லலாம்.
* கொதிக்கிற எண்ணைச்சட்டில போட்டு கொல்லலாம்.

இதெல்லாம் கஷ்டமாக இருந்தால் ஒரு எளிய வழி உள்ளது. அது என்னவென்றால் முதலில் மிளகாய்பொடியை சீனியில் கலக்கி எறும்பு வரும்வழியில் வைக்க வேண்டும். அது சாப்பிட்டவுடனே அதிக காரம் காரணமா தண்ணி தாகம் எடுக்கும். தண்ணி குடிக்க பெரிய தொட்டிக்கு போகும்போது அதை உள்ள தள்ளி விட்டுறனும். ஒடம்பெல்லாம் நனஞ்சுபோயி அதை காய வைக்க தீக்கு பக்கத்தில போகும்போது தீயில ஒரு பாம் போடுங்க. உடனே அதை ஹாஸ்பிட்டல்ல அவசரவார்டுல சேர்ப்பாங்க. அங்க யாரும் இல்லாத போது நீங்க மட்டும் தனியா போயி அதோட முகத்தில மாட்டி இருக்கிற ஆக்சிஜன் மாஸ்க்க எடுத்துடுங்க. வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சிடும்.

இவ்வாறு மேற்க்கண்ட வழிமுறைகளில் எறும்பினை கொல்லலாம்.

(ங்கொய்யால.. எங்க கிட்டயேவா? ரெண்டு மார்க் கேள்வியா நீ எட்டு மார்க்குல கேட்ட எழுத மாட்டோம்னு நெனச்சியா? எட்டு மார்க் கிடைக்குதுன்னா நாங்க யாரவேணுமின்னாலும் கொள்வோம். எறும்பெல்லாம் ஒரு மேட்டரா?)

பி.கு :
* ஜெயந்த்க்கு உதவியா இருக்கும்னு நெனக்கிறேன்.
* அந்த மாணவன் யாருன்னு கேக்காதீங்க? சொல்லமாட்டேன்..சொல்லமாட்டேன்..ரகசியம்..ரகசியம்..

38 கருத்துக்கள்:

வினோ said...

ஹஹஹஹஹா :) ஜெய்க்கேவா?

எஸ்.கே said...

ஆளாளுக்கு எறும்பை புடிச்சு என்னென்னவோ பண்ணிறீங்க!
ப்ளூ கிராஸ் வந்துட்டுருக்கு!

Anonymous said...

ஆஹா.. ஒரு குரூப்பா தான் கிளம்பியிருக்கீங்களா?
நாம தான் தெரியாம வந்து மாட்டிக் கிட்டமோ.. :))

சி.பி.செந்தில்குமார் said...

யார்யு்யா அது நடு ராத்திரில பதிவு போடறது?ஒரு வேளை ஃபாரீன் பதிவரோ?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

8 மார்க்குக்காக... எழுதினாலும்...சும்மா சொல்லப்பிடாது..

எவ்வளவு ஐடியா குடுக்குறீங்க.. உங்க விடாமுயற்சி சூப்பர்.... :-)))))

இம்சைஅரசன் பாபு.. said...

எப்படி எல்லாம் யோசிகிறான்கப்பா...முடியல

இம்சைஅரசன் பாபு.. said...

இரும்பை பல்லால் கடித்து கொள்ளலாம் ....எறும்பு தின்னால் கண்ணுக்கு நல்லதாம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

அண்ணே நமக்கேவா... சரி சரி...

ஏறும்ப கொல்றதுக்கு இவ்வளவு வழி இருக்கா.. அது தெரியாம நான் ரொம்ப சிரமப்பட வேண்டியது போச்சு....

நம்மள விட பெரியா கொவக்காரரா இருப்பீங்க போல... இந்த எறும்பு செய்த குற்றம் தான் என்னவோ..!!!!!

சிவசங்கர். said...

Dei anbu...
Room pottu yosikkarayaa?

Unknown said...

ஒரு எறும்பைக் கொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!

அருண் பிரசாத் said...

ஒரு எறும்பை கொல்ல இவ்வளவு அக்கபோரா...

செல்வா said...

அடடா , உண்மைலேயே இது செம காமெடியா இருக்கு ..
எனக்கு தெரிஞ்சா சில வழிகள சொல்லட்டுமா ..?

மோகன்ஜி said...

அன்பு! ஏன்? ஏன்? ஏனிந்த கொலைவெறி?

Chitra said...

மோகன்ஜி said...

அன்பு! ஏன்? ஏன்? ஏனிந்த கொலைவெறி?


.....அதே.... அதே.... ஏன்? ஏன்?

அன்பரசன் said...

@ வினோ
நன்றி
@ எஸ்.கே
ப்ளூ கிராஸ்னா ப்ளூ கலர்ல கிராஸ் போட்டிருப்பாங்களே அதுதானே?
@ பாலாஜி சரவணா
குரூப்பெல்லாம் இல்லீங்க. நானும் ஜெயந்த்-ம் மட்டும் தான்.

அன்பரசன் said...

@ சி.பி.செந்தில்குமார்
ஃபாரீன்லாம் கிடையாதுங்க. ராத்திரி தூக்கம் சரியா வல்ல. அதான்.
@ ஆனந்தி
நன்றி
@ இம்சைஅரசன் பாபு..
அது இரும்பை இல்லங்க, எறும்பை.
@ வெறும்பய
இல்ல போன பதிவுல நீங்க கஷ்டப்படுறத பாத்தேன். அதனாலதான்.

அன்பரசன் said...

@ சிவசங்கர்.
இல்ல நண்பா நார்மலாதான்.
@ பதிவுலகில் பாபு
@ அருண் பிரசாத்
என்ன பண்றதுங்க? நாம வாழறதுக்காக என்ன வேண்ணாலும்...
@ ப.செல்வக்குமார்
சொல்லுங்க

அன்பரசன் said...

@ மோகன்ஜி
@ சித்ரா
என்ன பண்றதுங்க? நாம வாழறதுக்காக..

கவி அழகன் said...

பின்னிடிங்க போங்க

மதுரை சரவணன் said...

எறும்பு உதவிய புறா படித்தால் ஆபத்து.... எதுக்கும் புறா படிக்காமல் பாதுகாக்க அல்லது புறா சூப் வைக்க அய்டியா கொடுங்க... எறும்புகள் ஜாக்கிரதை..

NaSo said...

என்னால முடியல!!

அன்பரசன் said...

@ யாதவன்
@ மதுரை சரவணன்
முழுசா புரியல.
@ நாகராஜசோழன்
@ அப்பாதுரை

வரவுக்கு நன்றி.

Sriakila said...

நீங்க இந்தளவுக்குப் பெரிய கொலைகாரனா இருப்பீங்கன்னு நெனைச்சு கூடப் பாக்கலை...

வார்த்தையில‌ இருக்கிற ஆத்திரத்தைப் பார்த்தா எறும்பக் கொல்றதுக்கு ஐடியாக் கொடுத்தமாதிரி தெரியல்...

shunmuga said...

antha manavan neegathan yendru thrium

Unknown said...

எறும்பு ஒரு சுவாரஸ்யமான பிராணி தல ...

Anonymous said...

அசத்துறீங்க....அருமை..அருமை

அன்பரசன் said...

@ ஸ்ரீஅகிலா
அய்யோ நான் கொழந்தைங்க. இதெல்லாம் சும்மா தமாசுக்கு.
@ ஷண்முகா
நான் இல்லீங்கோ
@ கே.ஆர்.பி.செந்தில்
ஆமாங்
@ படைப்பாளி
நன்றி.

Ramesh said...

சூப்பர் 8க்கு 8 வாங்கிட்டீங்க......

சி.பி.செந்தில்குமார் said...

o,இன்னும் புது பதிவு போடலையா?

ம.தி.சுதா said...

நம்ம கிட்டயும் ஒரு 8 மதிப்பெண் கேள்வியிருக்கு பதில் தர முடியுமா..???

ம.தி.சுதா said...

சகோதரா.. இந்த வாக்குப் பட்டைகளில் உங்களுக்கு நாட்டம் இல்லையா...

Radhakrishnan said...

ஹா ஹா! எட்டு மார்க்கு!

Radhakrishnan said...

//நம்ம கிட்டயும் ஒரு 8 மதிப்பெண் கேள்வியிருக்கு பதில் தர முடியுமா..???//

ஆஹா! கேளுங்க கேளுங்க.

அன்பரசன் said...

@ பிரியமுடன் ரமேஷ்
ஃபுல் மார்க் போட்டதுக்கு நன்றிங்க
@ சி.பி.செந்தில்குமார்
இன்னும் இல்லங்க.
@ ம.தி.சுதா
முடிஞ்சா கண்டிப்பா தர்றேன். கேளுங்க.

இல்லை சகோ. அதனால்தான் தமிழ்மணம் கருவிப்பட்டை மட்டும் வைத்துள்ளேன்.
@ ராதாகிருஷ்ணன்
ஃபுல் மார்க் போட்டதுக்கு நன்றிங்க

துளசி கோபால் said...

வெரி குட்:-)

இப்போ அடுத்த கேள்வி.

பல்லியை வீட்டைவிட்டு ஓட்டுவது எப்படி?

கொன்னால் தோஷம் பிடிச்சுக்குமாம். அதனால் துரத்தினால் போதும்.

சாந்தி மாரியப்பன் said...

நல்லவேளை பத்துமார்க்குக்கு கேள்வி கேக்கலை.. கேட்டுருந்தா இன்னும் என்னென்ன வழிகள்ல கொலை பண்ணியிருப்பீங்களோ :-))))))

அன்பரசன் said...

@ துளசி கோபால்
அது ரொம்ப சிம்பிள். ஒரு சாக்ஸ எடுத்து பல்லி மேல போடுங்க. அது தானா வீட்டை விட்டு ஓடிடும்.
@ அமைதிச்சாரல்
இன்னும் நாலுவரி சேர்த்தி எழுதி இருப்பேன். அவ்வளவுதான்.

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

கையுல காசு இருக்குதோ இல்லையோ. எல்லா விசியதிலும் ஒரு கெத்து தா