Pages

Sunday, November 7, 2010

ஆக்ச‌ன் ரீப்ளே

விபுல் ஷா தயாரித்து இயக்கி அக்ச‌ய் குமார், ஐஸ்வர்யா ராய், நேகா தூபியா மற்றும் பலர் நடித்து ஹிந்தியில் வெளிவந்துள்ள படம்தான் ஆக்ச‌ன் ரீப்ளே.எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அப்பா அம்மாவைப் பார்த்து திருமணத்தை வெறுக்கிறான் ஒரு இளைஞன். அவ‌ர்க‌ள‌து திரும‌ண‌ம் தாத்தா பாட்டி வ‌ற்புறுத்த‌லின்பேரில் ந‌ட‌க்கிற‌து. பெற்றோர் திருமணம் காதல் திருமணமாய் இருந்திருந்தால் இந்த மாதிரி சண்டை போடாமல் இருப்பார்களே என நினைக்கிறான்.அவ‌னுடைய‌ காத‌லியின் தாத்தா க‌ண்டுபிடித்த‌ கால‌ எந்திர‌த்தின் உத‌வியால் த‌ன்னுடைய‌ பெற்றோரின் இற‌ந்த‌ கால‌த்துக்குள் நுளைகிறான். அத‌ன் பிற‌கு இற‌ந்த‌ கால‌த்தில் எவ்வாறு த‌ன‌து பெற்றோருக்கிடையில் காத‌லை உருவாக்குகிறான், இருவ‌ருக்குமிடையிலான‌ நெருக்க‌த்தை எவ்வாறு அதிக‌ரிக்கிறான் என்ப‌தே க‌தை.

நாய‌க‌னாக‌ ஆதித்யா ராய் க‌பூர் ம‌ற்றும் அவர‌து பெற்றோராக‌ அக்ச‌ய் குமார் ம‌ற்றும் ஐஸ்வர்யா ராய். ப‌ட‌த்தில் 1975க‌ளை காட்டும் காட்சிக‌ளில் இய‌க்குன‌ரின் மென‌க்கெட‌ல் தெரிகிற‌து ம‌ற்றும் அக்ச‌யின் ஓட்ட‌லில் வேலை செய்ப‌வ‌ராக‌ வ‌ரும் ராஜ்பால் யாத‌வ்‍‍‍‍‍‍‍‍-ன் காமெடி கொஞ்ச‌ம் ஆறுத‌ல்.அதைத் த‌விர‌ ப‌ட‌த்தில் சொல்லிக்கொள்ளும்ப‌டி ஒன்றும் இல்லை. லாஜிக் என்ப‌து சுத்த‌மாக‌ கிடையாது. இசையும் சுமார் ர‌க‌ம்தான்.

அக்ச‌ய் இத‌ற்காக‌ நீண்ட‌முடி வ‌ள‌ர்த்து த‌ன‌து ஹேர்ஸ்டைலை மாற்றி இருக்கிறார். அவ‌ரை இதில் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு கோமாளி போல‌ காட்டி இருக்கின்ற‌ன‌ர். அக்ச‌யை எப்போதும் க‌லாய்க்கும் கேர‌க்ட‌ரில் ஐஸ். ஐஸ்வர்யா ராய் ராவ‌ண‌ன் ம‌ற்றும் எந்திர‌னுக்கு அப்புற‌ம் இப்ப‌டி ஒரு ப‌ட‌மா?. எப்ப‌டி இந்த‌ ப‌ட‌த்திற்கு ஒப்புக்கொண்டார் என்றே விள‌ங்க‌வில்லை. ஐஸின் ந‌ண்ப‌ராக‌ வ‌ரும் ரான்விஜ‌ய் சிங்கின் ந‌டிப்பும் ர‌சிக்கும்ப‌டி இல்லை. நேகாவும் இதே ர‌க‌ம்தான்.


நாய‌க‌ன் வ‌ந்த‌ கால‌ எந்திர‌ம் 1975க்கு சென்ற‌வுட‌ன் சேத‌ம‌டைந்து விடுகிர‌து. பின்பு அவ‌ர் கால‌ எந்திர‌ம் க‌ண்டுபிடித்த‌வ‌ரை 35 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே ச‌ந்திப்ப‌தாக‌வும், அவ‌ர் மாற்று இய‌ந்திர‌ம் க‌ண்டுபிடிப்ப‌தாக‌வும் அத‌ன் மூல‌ம் திரும்பி 2010க்கு வ‌ருவ‌தாக‌வும் இருப்ப‌து சுத்தாக‌ ஏற்றுக்கொள்ள‌ இய‌ல‌வில்லை. இவ்வாறு நிறைய‌ இட‌ங்க‌ளில் லாஜிக் உதைக்கிற‌து (எங்கேன்னு கேக்காதீங்க‌).

இய‌க்குன‌ர் விபுல் ஷாவைப் ப‌ற்றி இங்கே கண்டிப்பாக சொல்ல‌ வேண்டும் (ஏன்னா த‌யாரிச்ச‌ புண்ணிய‌வான் அவ‌ர்தானே). இவ‌ர் மின்ன‌லே ப‌ட‌த்தின் ரீமேக் ஆன‌ ரெஹ‌னா ஹை தேரே தில்மே ப‌ட‌த்தில் ரைட்ட‌ராக‌ ப‌ணிபுரிந்த‌வ‌ர். க‌ட‌ந்தாண்டு வெளிவ‌ந்த‌ ல‌ண்ட‌ன் ட்ரீம்ஸ் என்ற‌ ப‌ட‌த்தை இய‌க்கிய‌வ‌ர் (அம்ம‌ணி அசின், ச‌ல்மான் ம‌ற்றும் அஜ‌ய் தேவ்க‌ன் ஆகியோர் ந‌டித்த‌து). காக்க‌ காக்க‌ வின் ஹிந்தி ரீமேக் (ஜான் ஆப்ர‌காம் ம‌ற்றும் ஜெனிலியா) ம‌ற்றும் ஏ.ஆர்.முருக‌தாஸின் அடுத்த‌ ஹிந்தி ப‌ட‌ம் (அக்ச‌ய் குமார் ம‌ற்றும் அசின்) இர‌ண்டையும் த‌யாரிக்கிறார் என்ப‌து உப‌த‌க‌வ‌ல் (ந‌ல்ல‌வேளை இய‌க்க‌லை).

ஓர‌ள‌வு ந‌ல்ல‌ க‌தை, இன்னும் ந‌ன்றாக‌ உருவாக்கி இருக்க‌லாம். மொத்த‌த்தில் ஆக்ச‌ன் ரீப்ளே ஒரு பெருத்த‌ ஏமாற்ற‌ம் (என்ன‌ ப‌ண்ற‌து? விம‌ர்ச‌ன‌ம் எழுதி ம‌ன‌ச‌ தேத்திக்க‌ வேண்டிய‌துதான்). தீபாவ‌ளிக்கு வேற‌ ந‌ல்ல‌ப‌ட‌ம் ஏதும் ரிலீஸ் ஆகாத‌தால் (நாங்க‌ளும் அப்ப‌டிதானே போயி மாட்டிக்கிட்டோம்) ஓர‌ள‌வு வ‌சூல் எதிர்பார்க்க‌லாம் (வேறென்ன‌ போட்ட‌ காசுதான். ப‌ட்ஜெட் 40 கோடிங்க‌).

பி.கு : இப்ப‌டிக்கு மொக்க‌ப்ப‌ட‌த்த‌ தேடிப்போயி பார்த்து பின் புல‌ம்புவோர் ச‌ங்க‌ம்.

12 கருத்துக்கள்:

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ(என்ன‌ ப‌ண்ற‌து? விம‌ர்ச‌ன‌ம் எழுதி ம‌ன‌ச‌ தேத்திக்க‌ வேண்டிய‌துதான்). ஃஃஃஃ
ஏன் சகோதரா இந்தக் கடுப்பு... இருந்தாலும் பரவாயில்லை. வடக்கின் படம் பார்க்க சந்தர்ப்பம் இல்லாத எனக்கு ஒரு படம் காட்டி விட்டீர்கள். நன்றி..

பாரத்... பாரதி... said...

மொக்க படமா?
அப்படினா இந்த தீபாவளி உங்களுக்கு தீபா"வலி"

எஸ்.கே said...

இந்த கதையை கேட்டா Back to the future இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கே!

philosophy prabhakaran said...

மறுபடி சயின்ஸ் பிக்ஷனா...

இம்சைஅரசன் பாபு.. said...

வித்தியாசமாக கதை பண்ணுகிறேன் என்கிற போர்வையில் கழுத்தை அறுத்து தொலைகிறாங்க

Chitra said...

பி.கு : இப்ப‌டிக்கு மொக்க‌ப்ப‌ட‌த்த‌ தேடிப்போயி பார்த்து பின் புல‌ம்புவோர் ச‌ங்க‌ம்.


.....பீலிங்க்ஸ் ..... :-(

அருண் பிரசாத் said...

Total Damage... பாவம் நீங்க

பதிவுலகில் பாபு said...

Back to the future படத்தை சுட்டுடிருக்காங்க..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சூப்பர் படங்கள் சூப்பர் பதிவு

அன்பரசன் said...

@ ம.தி.சுதா
கடுப்பாகம என்ன பண்றதுங்க.
@ பாரத்... பாரதி...
உண்மையிலேயே தீப"வலி" தான்.
@ எஸ்.கே
நானும் அப்படிதான் நினைக்கிறேன்.
@ ஃபிலாஸொஃபீ பிராபகரன்
@ இம்சைஅரசன் பாபு..
@ சித்ரா
ஆமாங்க ஆமா
@ அருண் பிரசாத்
:(
@ பதிவுலகில் பாபு
நானும் அப்படிதான் நினைக்கிறேன்.
@ ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி.

பார்வையாளன் said...

when r u coming chennai ?

Anonymous said...

நல்லவேல காபாத்திடீங்க..என்னை..அருமை நண்பா