Pages

Sunday, November 14, 2010

கோழியும் நானும்


என் பெயர் சுகன். நான் ஒரு தனியார் நிருவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள் அலுவலகத்தில் நடந்த பார்ட்டி ஒன்றுக்கு போயிருந்தேன். அவ்வப்போது பார்ட்டிகளில் குடிப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான் போதை கொஞ்சம் அதிகமாகிவிட்டமையால் தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மனைவி அமலா ஏற்கனவே தூங்கிவிட்டிருந்தாள். அவளுக்கு அருகே அதே உடையுடன் தூங்கிவிட்டேன்.

தூங்கி எழுந்த போது என் படுக்கை அருகே ஒரு புதுஆள் நின்றிருந்தான். நான் அவனிடம் " யார் நீ? அதுவும் என் படுக்கையறையில்" என்றேன். அதற்கு அவனோ " நான் தான் எமன். இது உன் படுக்கையறை அல்ல" என்றான். நான் " என்ன நான் இறந்துட்டேனா? அதுமட்டும் ஆகாது. நான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. என் குடும்பத்துக்கு ஒரு குட்பை கூட சொல்லலை. என்னை நீ திருப்பி அனுப்பு " என்றதற்கு அவனோ(ரோ) "அனுப்பலாம். ஆனால் ஒரு நாயாகவோ அல்லது கோழியாகவோ மட்டுமே " என்றான்.

என் வீட்டிற்கு அருகில் ஒரு கோழிப்பண்ணை இருப்பது நினைவுக்கு வந்ததால் நானும் ஒரு கோழியா மாறி திரும்பிவர சம்மதித்தேன். அதன்படியே எமனும் என்னை திருப்பி கோழி உருவில் அனுப்பினான்.

பண்ணைக்குள் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சேவல் எதிரே வந்தது. "நீ தான் புதுசா வந்திருக்கிற கோழியா? எப்படி இருக்கு முதல்நாள் அனுபவம்" எனக் கேட்டது. நான் " நல்லாத்தான் இருக்கு. ஆனா ஒரு வித்தியாசமான ஃபீலிங். அதாவது நான் உள்ளுக்குள் வெடிக்கிறமாதிரி இருக்கு" என்றேன். அதுவோ " நீ முட்டை இடப்போறே. இதுக்கு முன்னாடி நீ முட்டை இட்டதே இல்லையா என்ன?" என்றது. நான் "இல்லை" என்றேன். "கொஞ்சம் ரிலாக்சா இரு. தானா வந்துடும்" எனக்கூறி விடைபெற்றது.

ஒரிரு வினாடிகளில் பின்புறமாக ஒரு முட்டை கீழே வந்து விழுந்தது. எனக்கு மிகமிக சந்தோசமாக இருந்தது ஏனென்றால் முதன்முறையாய் நான் தாய்மையடைந்து விட்டதால். இரண்டாவது முட்டை இட்டபோது அந்த மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பானது. அதே சந்தோசத்தோட மூணாவது முட்டை இடும்போது என் பின்னந்தலையில் ஒரு அடி இடியாய் இறங்கியது கூடவே என் மனைவி குரலும் " யோவ் நீ உக்காந்து இருக்குறது நம்ம படுக்கை மேல".


[இணையத்தில் உலவுகையில் எங்கோ எப்போதோ படித்தது.]

35 கருத்துக்கள்:

Unknown said...

சின்னபுள்ள...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஒரு மார்க்கமா தான் போயிட்டிருக்கு...

Unknown said...

ஹா.. ஹா ...

Anonymous said...

நான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு///
ஏன் டிராஃப்ட் ல வெளியிடாத பதிவு நிறைய இருக்குதா

Anonymous said...

ஹஹா சூப்பரா இருக்கு...

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ..........ஹா..............

NaSo said...

இப்பவாவது திருந்தி விட்டீர்களா?

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு :))!

'பரிவை' சே.குமார் said...

ஹா.. ஹா ... ஹா.. ஹா ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாருக்குய்யா... ஆமா அப்புறம் பெட்ரூம... இல்ல.. இல்ல.. வீடு புல்லா நீங்கதானே கழுவி விட்டீங்க?

Anonymous said...

என்ன நண்பா இப்படி பண்ணிடீறு..ஹா.ஹா..

அன்பரசன் said...

@ பாரத்... பாரதி...
@ வெறும்பய
@ கே.ஆர்.பி.செந்தில்
@ ஆர்.கே.சதீஷ்குமார்
அதெல்லாம் இல்லீங்க.
@ இம்சைஅரசன் பாபு..
@ நாகராஜசோழன்
எங்கங்க நாம திருந்தினாலும் இந்த உலகம் விடமாட்டேங்குதே!
@ ராமலக்ஷ்மி
@ சே.குமார்
@ பன்னிக்குட்டி ராம்சாமி
நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க. அது நான் கிடையாது.
@ படைப்பாளி

வருகைக்கு நன்றி நண்பர்களே!

எஸ்.கே said...

ரசித்தேன்! சிரித்தேன்!

nis said...

கொஞ்சம் வித்தியாசமா இருக்கே. ;))

Philosophy Prabhakaran said...

// @ பன்னிக்குட்டி ராம்சாமி
நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க. அது நான் கிடையாது //
க்ளைமாக்ஸ் சரிவர விளங்கவில்லையே...

Anonymous said...

ஹா ஹா!

ஹேமா said...

அன்பு...3 முட்டையோட கோழிப்படமும் அழகு !

Sriakila said...

படித்து விட்டு என்னால் இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை..

Unknown said...

ஹா ஹா ஹா...

செல்வா said...

நல்லா இருக்குங்க ., சிரிப்பா இருக்கு ..!!

செல்வா said...

//" யோவ் நீ உக்காந்து இருக்குறது நம்ம படுக்கை மேல".//

அப்படின்னா அதுதான் அவுங்களோட கணவர் அப்படின்னு அவுங்களுக்கு எப்படி தெரிஞ்சுது ..?
ஹி ஹி ஹி .. சும்ம்மா ஒரு சந்தேகம் ..

அருண் பிரசாத் said...

நல்லவேளை அதை நீங்க அம்லெட் போட்டதா கனவுகாணல

அன்பரசன் said...

@ எஸ்.கே
@ நிஸ்
@ ஃபிலாஸொஃபீ பிரபாகரன்
அதுக்கு கொஞ்சம் டைம் ஆகுங்க.
@ பாலாஜி சரவணா
@ ஹேமா
@ ஸ்ரீஅகிலா
@ பதிவுலகில் பாபு
@ ப.செல்வக்குமார்
சரக்குல இருந்தது அவரு மட்டுந்தான். அவர் மனைவி கிடையாது.
@ அருண் பிரசாத்
ஐயோ அது நான் இல்ல இல்ல.

அனைவருக்கும் நன்றி.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ரசித்தேன்! சிரித்தேன்!

ஆர்வா said...

எங்கேயோ நீங்க படிச்சிருந்தாலும் உங்க பக்கத்தில் படிக்கிறது நல்லா இருக்கு.. அருமை

Unknown said...

அன்பரசன்.. ரஜினிகாந்த் பற்றிய தொடர்பதிவை எழுத எனது பதிவில் உங்களை அழைத்துள்ளேன்..

http://abdulkadher.blogspot.com/2010/11/blog-post_19.html

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா.. என்னமா தின்க் பண்றாங்க.. :-))

ஹரிஸ் Harish said...

எங்கேயோ நீங்க படிச்சிருந்தாலும் உங்க பக்கத்தில் படிக்கிறது நல்லா இருக்கு.. //
ரிப்பீட்டு..

ராஜி said...

சூப்பர் ஆனா கப்ஸ்

ராஜி said...

இன்றுதான் தங்கள் தளத்திற்கு வந்தேன். அருமையாக உள்ளதுஃ என்னைவிட கண்டிப்பாக இளையவராகத்தான் இருப்பீர் என்ற நம்பிக்கையில் தங்கள் எழுத்து மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

THOPPITHOPPI said...

யோவ் நீ உக்காந்து இருக்குறது நம்ம படுக்கை மேல".

hehehe

மோகன்ஜி said...

சுவாரஸ்யமா எழுதிஇருக்கீங்க அன்பு!ரசித்தேன்

Chitra said...

:-))

அன்பரசன் said...

@ பிரஷா
@ கவிதை காதலன்
@ ம.தி.சுதா
@ பதிவுலகில் பாபு
@ ஆனந்தி
@ ஹரிஸ்
@ ராஜி
வாழ்த்துக்கு நன்றிங்க.
@ தொப்பிதொப்பி
@ மோகன்ஜி
@ சித்ரா

வரவுக்கு நன்றி நண்பர்களே!

Unknown said...

ஹா.. ஹா ... ஹா.. ஹா .

mee the first..