Thursday, November 25, 2010
தல ரஜினி
ரஜினி..
அநேகமாக ஒவ்வொரு சினிமா ரசிகருக்கும் தெரிந்த ஒரு பெயர். ஒரு ஒப்பற்ற கலைஞர் (ஆனால் சமீபகாலமாக அவரை மையமாக வைத்து ஜோக்ஸ் பரப்பப்படுவது சிறிது சங்கடமாக இருக்கிறது). அறிமுகம் தேவை இல்லை என நினைக்கிறேன். அவரைப்பற்றியும் அவரது நடிப்பைப் பற்றியும் எக்கச்சக்கமாக எழுதலாம்.
சிறுவயதில் நகைச்சுவைக்காக பார்க்க ஆரம்பித்து பின் அவரது ஸ்டைல் மற்றும் நடிப்பில் அசந்துபோய் ரசிகனாய் மாறிவிட்டேன். ரஜினியின் மொத்த படங்களில் இருந்து பத்தை மட்டும் பிரித்தெடுப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல. இருப்பினும் மிக ரசித்த படங்கள் என நான் நினைப்பதை வரிசைப்படுத்துகிறேன்.
படங்கள் மற்றும் அவற்றை பிடிக்க காரணம்:
படையப்பா
நகைச்சுவை மற்றும் அவரது ஸ்டைல்
ஜானி
காற்றில் எந்தன் கீதம் என்ற பாடலுக்காக மட்டுமே படம் பார்க்க ஆரம்பித்து பின் மொத்த படமும் பிடித்துப்போய் விட்டது. (இந்த படத்தின்போது ஸ்ரீதேவிக்கு வெறும் 17 வயசு மட்டுமே என்பது உபரிதகவல்).
பாட்ஷா
அசாத்தியமான ஸ்டைல்
அண்ணாமலை
குஷ்பூ மற்றும் ஜனகராஜ் உடனான நகைச்சுவைக் காட்சிகள், சரத்பாபு உடனான நட்பு மற்றும் மோதல்.
தளபதி
நல்ல நட்பிற்க்கு ஒரு சிறந்த உதாரணம்.
16 வயதினிலே
என்னதான் வில்லனா இருந்தாலும் ரொம்ப பிடிச்சிருந்தது (காரணம் சொல்லத்தெரியல).
தர்மத்தின் தலைவன்
வாத்தியார் ரஜினியின் நகைச்சுவைக் காட்சிகள்.
நல்லவனுக்கு நல்லவன்
ஒரு அப்பாவாக(நான் இல்லீங்க ரஜினி) மிகப் பிடித்திருந்தது.
முரட்டுக்காளை
பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் அவரது தம்பிகளுடனான நகைச்சுவைக் காட்சிகள்.
பில்லா
ஒரு டானாக ரஜினி மிகப்பொருந்தி வந்தார்.
தில்லுமுல்லு, மூன்று முகம், முத்து, முள்ளும் மலரும், தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், நான் சிகப்பு மனிதன் இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். பத்து மட்டுமே என்பதால் எல்லாவற்றையும் குறிப்பிட இயலவில்லை.
அவர் நடித்து எனக்கு பிடித்த பாடல்கள் சில இதோ:
முத்தமிழ்கவியே வருக - தர்மத்தின் தலைவன்
பேசக்கூடாது, ஆசை நூறுவகை - அடுத்தவாரிசு
சந்தனக்காற்றே - தனிக்காட்டுராஜா
காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு
தோட்டத்தில பாத்திகட்டி - வேலைக்காரன்
நூருவருஷம் - பணக்காரன்
(இன்னும் பல என்பதால் வெறும் சேம்பிளோடு நிறுத்திக்கொள்கிறேன்.)
19 கருத்துக்கள்:
பகிர்வு நன்று:)!
நல்ல தொகுப்பு நண்பரே...
என் அழைப்பை ஏற்று.. தொடர்பதிவு எழுதியதற்கு நன்றிங்க அன்பரசன்..
உங்களது தொகுப்பும் அருமை.. :-)
நல்ல தொகுப்பு... என் டேஸ்டுக்கு ஏற்றபடி இருந்தது
தங்கள் தொகுப்பும் நன்றாக இருக்கிறது...
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/
Howiz it? Super!
நல்ல தொகுப்பு :)
நல்ல தொகுப்பு
எனக்கு பிடித்தது பாட்ஷா
எனக்கு பிடித்த பாடல் காதலின் தீபம் ஒன்று
நல்ல தொகுப்பு அன்பரசன் சார் .........
தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி அன்பரசன்...
நல்ல தொகுப்பு
தல ரஜினி - இது நல்லாருக்கே!!
பகிர்வு அருமை..
நல்ல தொகுப்பு நண்பரே...
உங்க தொகுப்பும் நல்லா இருக்குங்க ..!!
@ ராமலக்ஷ்மி
@ வினோ
@ பதிவுலகில் பாபு
@ பார்வையாளன்
@ ம.தி.சுதா
@ சித்ரா
@ பாலாஜி சரவணா
@ நிஸ்
@ இம்சைஅரசன் பாபு..
@ அருண் பிரசாத்
@ நாகராஜசோழன்
@ படைப்பாளி
@ வெறும்பய
@ ப.செல்வக்குமார்
நன்றி.
சிறப்பான தொகுப்பு!
ரஜினியின் பல பாடல்கள் என்றும் இனியவை தான்.. கேட்டுக் கொண்டே இருக்கலாம்..
படவரிசையும் அருமை நண்பரே..
ரஜினிக்கு அர்ப்பணம்!
அன்பு...ரஜனி அவர்களின் பழைய படங்கள் ரசித்து பார்க்கக்கூடியவைதானே.எங்கேயோ கேட்ட குரல்,புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்கள் மனதில் படியக்கூடியவை !
Post a Comment