ஊரை விட்டு தொலைவில் இருப்பதால் தமிழ்நாட்டில் அன்றாடம் நடப்பவற்றை தெரிந்து கொள்ள நான் தினமலர் படிப்பது வழக்கம்.
சமீபத்தில் அவ்வாறு படித்து கொண்டிருக்கும்போது இதைப் படித்தேன்.
எனக்கு ஒரே அதிர்ச்சியா இருந்தது. நம்ம அழிவு நெருங்கிருச்சுன்னு நெனச்சேன். ஏற்கனவே இதக்கேள்விப்பட்டு நெறையப்பேரு ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருக்கறதா கேள்விப்பட்டேன். எனக்கு வேற பிஞ்சு மனசு. அது தாங்குமா இல்லையான்னு வேற தெரியலையே.
இந்த நாள்ல ஆம்புலன்சு வசதி வேற கிடையாதாம். ஏன்னா எல்லாத்தையும் இந்த வைபோவத்துக்காக முன்கூட்டியே ரிசர்வ் பண்ணி வச்சுட்டாங்களாம்.
இந்தமாதிரி தவிச்சுட்டு இருந்தப்பதான் இந்த செய்திய படிச்சேன். கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்தது. ஆனாலும் என்ன சந்தோசம் ஒரு ஆறு வாரத்துக்கு மட்டும்தானே. அதுக்கு அப்புறமா எப்படியும் இதை சமாளிச்சுதான் ஆகணும்.
இதுக்கே என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கும்போது அடுத்த இடியா இந்த தகவல்.
ஒரு தாக்குதலையே சமாளிக்க பயங்கரமா பிளான் பண்ணவேண்டி இருக்கே. அதுக்குள்ள அடுத்த அஸ்திரத்தை எடுத்துட்டாங்களே.
நான் ஏன் இந்த அளவுக்கு பதர்றேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு. நாங்க இருக்குற ஏரியாவுல தமிழ் படங்கள் அதிகமா ரிலீஸ் ஆகாது. எப்பவாவது ஒரு படம் ரிலீஸ் ஆகும். ஆனா பாருங்க நம்ம டாக்டர் தம்பியோட படம் மட்டும் கரெக்டா ரிலீஸ் பண்ணிருவாங்க. நம்ம அறைத்தோழனுக்கு சினிமான்னா ரொம்ப இஷ்டம். எந்த தமிழ் படம் போட்டாலும் உடனே டிக்கெட் புக் பண்ணிடுவான். இப்படித்தான் இதுக்கு முன்னாடி கூட ஏதோ எறாவோ சுறாவோ ஒரு படம், அதுக்கு முன்னாடி சாட்டைக்காரனோ வேட்டைக்காரனோ ஏதோ ஒண்ணு முன்கூட்டியே (கேக்காம) புக் பண்ணித்தொலச்சதுனால போயிருந்தோம். அப்பப்பா ஒரே ரணகளம் போங்க. { அதிலும் குறிப்பாக சொறா படத்துக்கு போகும்போது முந்தின ஷோ பாத்த ஒரு நண்பன் சொன்னான் "டே புக் பண்ணின காசு போனாபோகுது. தயவுசெஞ்சு போகாத, மூணுமணி நேரமாவது மிஞ்சும்". அதையும் மீறிப்போயி :( }
நான் தப்பிக்க வழி எதுவுமே இல்லையா??
நீதி : ஒருத்தன் சாகறது முடிவாயிட்டா அவனை ஏற்கனவே செத்தவனாலகூட காப்பாத்த முடியாது.
பி.கு : இந்த அதிர்ச்சி தரும் தகவல்களை படிச்சத்தில் இருந்து தினமலர் வெப்சைட்டில் சினிமா செய்திகள் பக்கமே போறதில்ல.
32 கருத்துக்கள்:
1. //நம்ம அழிவு நெருங்கிருச்சுன்னு நெனச்சேன்// நிச்சயமாக
2. சந்தோசமா இருக்கிறது :))
கண்டிப்பா வழி இல்ல அடுத்தடுத்து புயலும்(காவலன்), சுனாமியும்(விருத்தகிரி) வந்துக்கிட்டு இருக்கு!!! இஷ்டதெய்வத்த வேண்டிக்கங்க!!!! நேரமிருந்தா இங்க வந்தும் கும்புடுங்க http://unmai-sudum.blogspot.com/
நண்பா வேற வழியே இல்ல.. விதி வலியது....
//நம்ம அறைத்தோழனுக்கு சினிமான்னா ரொம்ப இஷ்டம். எந்த தமிழ் படம் போட்டாலும் உடனே டிக்கெட் புக் பண்ணிடுவான். //
ஹா ஹா..
//நான் தப்பிக்க வழி எதுவுமே இல்லையா? //
விதி வலியது ;)
//nis said...
1. //நம்ம அழிவு நெருங்கிருச்சுன்னு நெனச்சேன்// நிச்சயமாக
2. சந்தோசமா இருக்கிறது :))//
நானே பயந்துகிடக்கேன்.
இதுல சந்தோசமா?
@ வைகை
@ வெறும்பய
@ பாலாஜி
ஆறுதலா ஒரு வார்த்தை சொல்லுவீங்கன்னு பாத்தா..
ஏன்யா இப்படி?
ஒரு நல்ல ஐடியா!! பேசாமா நீங்க ஒரு படம் நடிச்சி அதை விஜய் வீட்டுக்கு அனுப்பி வைங்க... நான் நிறுத்தனும் சொன்னா நீ நிறுத்து அப்படினு விஜய மிரட்டுங்க... :)
:-))
//நீதி : ஒருத்தன் சாகறது முடிவாயிட்டா அவனை ஏற்கனவே செத்தவனாலகூட காப்பாத்த முடியாது.//
இந்த நீதியை சொல்ல உங்களால் மட்டுமே முடியும்!
ஹ .........ஹ ....அப்போ கண்டிப்பா அழிவு நெருங்கிருச்சி
என்னோட வலைப்பூவுக்கு சீக்கிரமா வாங்க... உங்களுக்கு இன்னொரு அதிர்ச்சியும் இருக்கு...
2 வது சந்தோசம் காவலனை court இடைக்கால தடை போட்டதற்கு ;)))
அடங்க்கொக்க மக்கா... இதுக்கு தான் இன்சுரன்ஸ் பண்ணனும்னு சொல்லுரது... என்னது தற்கொலைக்கு இன்சுரன்ஸ் கவர் ஆகாதா?
ஐயோ பாவம்
/TERROR-PANDIYAN(VAS)
பேசாமா நீங்க ஒரு படம் நடிச்சி அதை விஜய் வீட்டுக்கு அனுப்பி வைங்க... நான் நிறுத்தனும் சொன்னா நீ நிறுத்து அப்படினு விஜய மிரட்டுங்க... :)//
நீங்க ஹீரோ ஆகத்தயார்னா சொல்லுங்க. நான் படத்த இயக்குறேன்.
@ Chitra
நன்றிங்க.
///நாகராஜசோழன் MA said...
//நீதி : ஒருத்தன் சாகறது முடிவாயிட்டா அவனை ஏற்கனவே செத்தவனாலகூட காப்பாத்த முடியாது.//
இந்த நீதியை சொல்ல உங்களால் மட்டுமே முடியும்!///
எல்லாம் அரசியல் வாழ்க்கைல கத்துக்கிட்டதுதான்.
@ இம்சைஅரசன் பாபு..
ஆமாங்க ஆமா
@ philosophy prabhakaran
அந்தக்கொடுமைய காலைலயே பார்த்தேன்.
@ nis
அப்படியா?
ஓகே
@ அருண் பிரசாத்
//என்னது தற்கொலைக்கு இன்சுரன்ஸ் கவர் ஆகாதா?//
ஆகாதுல்ல.
@ பார்வையாளன்
மி த பாவம்
////நீதி : ஒருத்தன் சாகறது முடிவாயிட்டா அவனை ஏற்கனவே செத்தவனாலகூட காப்பாத்த முடியாது./////
kalakkal
//நீதி : ஒருத்தன் சாகறது முடிவாயிட்டா அவனை ஏற்கனவே செத்தவனாலகூட காப்பாத்த முடியாது.//
உங்க தத்துவம் செம .,
டாக்டர் பாவமய்யா..!
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@ ப.செல்வக்குமார்
நன்றி.
//♠ ராஜு ♠ said...
டாக்டர் பாவமய்யா..!//
மி டூ பாவம்
நல்ல பழக்கம் அன்பு.இனிமேல் சினிமாச் செய்தி எதுவுமே படிக்காதீங்க !
//நீதி : ஒருத்தன் சாகறது முடிவாயிட்டா அவனை ஏற்கனவே செத்தவனாலகூட காப்பாத்த முடியாது//
Super! :-)
பாவம் அந்த தம்பிய இப்ப பதிவுலையும் போட்டுக் கிழிக் கிறீங்களா ?பாவம் விடுங்கப்பா!பொழச்சி போகட்டும்.
காமடிக்கு ஒரு அளவே இல்லையா? நான் கூட ஏதோ சீரியஸ்ஸான மேட்டர இருக்குமோனு படிச்ச,,,,,,,,,,,,,,
@ ஹேமா
ஆமாங்க.
@ ஜீ...
நன்றிங்க.
@ padaipali
அவரு மட்டும் படம் எடுத்து கொல்ரார்.
@ THOPPITHOPPI
:)
நான் தப்பிக்க வழி எதுவுமே இல்லையா??//
சான்சே இல்ல..
நீதி சூப்பரு..
நீதி நல்லா இருக்கு.
இப்படிக்கு விதிவசப்பட்ட தமிழன்.
மனசக் கல்லாக்கிக்கிட்டு ரெடியாக வேண்டியதுதான்..
@ ஹரிஸ்
@ சிவகுமாரன்
@ பதிவுலகில் பாபு
நன்றிங்க.
நக்கலும் நையாண்டியும் உங்களுக்கு அழகாய் எழுதா வருகிறது அன்பு !
Post a Comment