சரியாய் பதினொன்றரை மணிக்கு ஒரு ஃபோன்கால்.
அது வேற யாரும் இல்லீங்க நம்ம மாப்பிள்ளை தான் (12:30 கல்யாணத்துக்கு 11:30 க்கு வர்றான்பாரு மண்டையன்). சந்திப்புக்கு அப்புறம் அருகிலிருந்த ஒரு கோயிலுக்கு போய் மணமகன் அலங்காரம் நடந்தது. இடையில் ட்ரம்ஸ் குரூப் மற்றும் அலங்கரிக்கப்பட்ட குதிரையும் வந்து சேர்ந்தது.
ஒரு வழியாய் ஒரு மணி அளவில் கோவிலை விட்டு வெளியே வந்தான்(ர்) மணமகன். ஆட்டம் பாட்டம் மேளதாளத்தோடு 1:50 மணி அளவில் கல்யாணப்பந்தலை வந்து சேர்ந்தார். உடனே மணமகனது அப்பா அருகிலிருந்த மணப்பெண்ணின் வீட்டிற்கு போய் அலங்கரிக்கப்பட்டிருந்த பெண்ணை தூக்கி வந்து மகனின் அருகில் நிறுத்தினார் (நல்ல வழக்கம்). பின் மணமகனின் தாயார் இருவருக்கும் ஆரத்தி எடுத்து பந்தலின் உள்ளே அழைத்து சென்றார்.
இருவரும் மேடையின் மத்தியில் எதிரெதிராக ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தவாரு நின்றனர். மேடையின் ஒருபுறம் சீர்வரிசைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க மறுபுறம் மந்திரம் ஓதுபவர்கள் அமர்ந்திருந்தனர். பின் மந்திரம் ஓதத் தொடங்கினர். அரை மணி நேர ஓதலுக்கு பிறகு இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பிறகு மணமக்கள் இருவருக்கும் இனிப்பு பரிமாரப்பட்டது.
நம் ஊரில் பெண் கழுத்தில் தாலி ஏறியபிறகுதான் அட்சதை தூவுவோம். ஆனால் இங்கோ வித்தியாசமாக இருவரும் உள்ளே நுழைந்ததில் இருந்து மாலை மாற்றும் வரை அனைவரும் அட்சதை தூவிக்கொண்டே இருந்தனர்.
நம்ம ஊர்லதான் கல்யாணம் நடக்கும்போதே மக்கள் பந்தியில் நுழைவர் என்றால் இங்கும் அதற்கு விதிவிலக்கு இல்லை. சிலர் கல்யாண வைபவத்தின் இடையிலேயே தமது வேலையை பொறுப்பாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இங்கு ஒரு விசயம் என்னை மிகவும் கவர்ந்தது. அதாவது சாப்பிட்டபிறகு கை கழுவ அவ்ர்கள் செய்திருந்த ஏற்பாடு அருமையாக இருந்தது. நிலத்திற்கு நீர் பாய்ச்சும் குழாயில் இருந்து ஒரு குழாயை நீட்டித்து அதில் நிறைய துளைகள் இட்டு தொங்க விட்டிருந்தனர் (அதையும் ஒரு சோளக்காட்டின் வாய்க்காலில் அமைத்திருந்தனர்). கை கழுவும் நீரானது சிறிதும் வீணகாமல் பயிருக்கு சென்று சேரும் விதம் இருந்தது.
வரும் வழியில் மீண்டும் பார், சரக்கு என வழக்கம்போல கொண்டாட்டம்தான். ஒருவழியாக வீட்டை வந்து சேர்கையில் இரவு மணி பன்னிரெண்டு இருபது. அப்புறம் என்ன தூக்கம் எம் கண்களை தழுவியதே.....
வேலையில் முடங்கி கிடந்த எங்களுக்கு புது இடம், புது மக்கள் என இனிமையான அனுபவமாய் அமைந்தது இந்த பயணம்.
16 கருத்துக்கள்:
nice
கலகலப்பான விசேஷம். அரசு பேருந்துகள் - பொது மக்கள் வீட்டு விசேஷங்களுக்காக வாடகைக்கு விடப்படுவது, புது விஷயம் தான்.
படங்களுடன், நல்லா இருந்துச்சு!
நினைவுகள் அருமை... ஆனால் முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யம் ஏனோ இரண்டாவது பாகத்தில் இல்லை...
அவசரப்பட்டு எழுதியிருகிறீர்கள் போல
விறு விருப்பு சற்று குறைந்து விட்டது
வாழ்த்துக்கள்
இன்னும் கொஞ்சம் விரிவா எழுதி இருக்கலாம்.
இன்னும் நல்லா எழுதி இருக்கலாம் அன்பரசன் சார் .........
கொண்டாட்டம்! :)
சூப்பர்! இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்!
ஏதோ மிஸ் ஆகுற மாதிரி உணர்வு... இன்னும் நல்லா எழுதி இருக்கலாமோ!
நல்ல அனுபவம்தாங்க.. :-)
வித்தியாச அனுபவம் தல ....
நல்ல பதிவு
அப்பா...ஏமாத்தாம நல்லா எழுதியிருக்கீங்க!அருமையான அனுபவம்!
nice !!!!!!!! :)
வந்து போன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
கொஞ்சம் அவசரத்தில் எழுதியதால் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது.
நல்லாருக்கு உங்கள் அனுபவங்கள்..
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் அன்பு.
Post a Comment