Pages

Saturday, February 12, 2011

எந்தாயி


வேலைக்கு போயிட்டு வந்து
அக்கடான்னு நீ உக்காரையில
ஃபீஸ் கட்டணும்பேன்
ஒடனே முந்தான முடிப்புலருந்து
ரூவா தருவியே அதுக்காகவாவது,
ஊர சுத்திட்டு நான் வரைல
நீ சாப்பிடரத பாத்து
உன் தட்ட புடுங்கிட்டு
வேற போட்டுக்கோம்பேன்
நாஞ்சாப்பிட வரைல சும்மா இருந்திட்டு
அப்பறம் சொல்லுவியே
சாப்பாடு முடிஞ்சிதுன்னு அதுக்காகவாவது,
கண்ணாடி பாத்து நாந்தல சீவயில
பின்னாலிருந்து திடும்னு தலைக்கு
எண்ண தேச்சு விடுவியே அதுக்காகவாவது,
வீட்டுல கறி சமைச்சா யாருக்கும் தெரியாம
சோத்துக்குள்ள மறச்சு ரெண்டு துண்டு
அதிகந்தருவியே அதுக்காகவாவது,
ராவுல நான் குளிருல
நடுங்கையில கேக்காமலே
போத்தி விடுவியே அதுக்காகவாவது
இன்னொருக்கா ஓன்வகுத்துலயே
பொறக்கோணுந்தாயி!

17 கருத்துக்கள்:

thendralsaravanan said...

பெற்றவ்ர்களின் உயரிய தியாகம் /பாசம் நாம் அந்த நிலை அடையும் போது தான் புரிகிறது!இல்லையா?!

ம.தி.சுதா said...

ஃஃஃஃவீட்டுல கறி சமைச்சா யாருக்கும் தெரியாம
சோத்துக்குள்ள மறச்சு ரெண்டு துண்டு
அதிகந்தருவியே அதுக்காகவாவது,ஃஃஃஃ

உருக்கமான வரிகள்..


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Unknown said...

தாய்மை என்பது மகத்தானது ஈடுஇணையற்றது. என்றும் வணங்குதல்குரியது. நாம் அதை முழுமையாக புரியும் தருணத்தில் கண்ணில் நீர் வரவழைப்பது.

அன்புடன் நான் said...

மிக இயல்பான கவிதைங்க... உணர்வுமிக்கதாய் இருந்தது.... பாராட்டுக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

எதுகை மோனைகளுக்கான செயற்கையான முயற்சிகள் எதுவும் இன்றி இயல்பான நடையில் எழுதப்பட்ட கலக்கல் கவிதை சார்

R. Gopi said...

வெரி நைஸ்

சிவசங்கர். said...

அருமை மாப்ள....

தந்தையும் தாயையும் பிரிந்திருப்பவனுக்கே அதன் வலி தெரியும்............

வினோ said...

:)

Anonymous said...

அருமை அன்பு....பாசம்...நேசத்தின் வெளிப்பாடு!

அன்பரசன் said...

@ தென்றல்
ஆமாங்க. உண்மைதான்.
@ ம.தி.சுதா
@ கே. ஆர்.விஜயன்
@ சி.கருணாகரசு
@ சி.பி.செந்தில்குமார்
@ கோபி ராமமூர்த்தி
நன்றிங்க.
@ சிவசங்கர்.
கண்டிப்பா
@ வினோ
:))
@ படைப்பாளி
நன்றிங்க.

Sriakila said...

அருமையான வரிகள்.

செல்வா said...

ரொம்ப அருமையா இருக்கு ..
அம்மா பத்தி எவ்ளோ சொன்னாலும் சொல்லிட்டே போகலாம் ..
/உன் தட்ட புடுங்கிட்டு
வேற போட்டுக்கோம்பேன்
நாஞ்சாப்பிட வரைல சும்மா இருந்திட்டு
அப்பறம் சொல்லுவியே
சாப்பாடு முடிஞ்சிதுன்னு அதுக்காகவாவது,//

வலி மிகுந்த வரிகள் .. கவிதையின் ஆழமான வரிகளும் கூட ..

Unknown said...

ஆஹா....

அன்பரசன் said...

@ ஸ்ரீஅகிலா
@ கோமாளி செல்வா.
@ கே.ஆர்.பி.செந்தில்

நன்றிங்க.

நிரூபன் said...

வணக்கம் சகோதரா,கிராமிய மொழி நடையில் சந்த கவிதை அருமை. அன்னையின் அரவணைப்பை, சொல்ல ஒரு சிறந்த மொழி வழக்கைக் கையாண்டுள்ளீர்கள் தோழா.

VELU.G said...

என் அம்மாவை நினைவுபடுத்துகிறது நண்பரே

குருவருள் said...

ஏன் என்று தெரியவில்லை இப்போதெல்லாம் அம்மாவை பற்றி நெஞ்சு தொடும் கவிதைகள் படிக்கும்போது என்னையறியாமல் கண்களில் கண்ணீர்.

அருமையான மற்றும் ஆழமான கவிதை.

குருவருள் காக்க,
சரவணன்,
நன்றி.