Pages

Sunday, February 27, 2011

ஆத்தாடி

கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் சில காகிதங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த போது ஒரு டாக்குமெண்ட் பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு மனிதர் தனது பெயருக்கு பின்னால் 30க்கும் மேற்பட்ட எழுத்துக்களை வைத்திருந்தார். நாமெல்லாம் ஒரு படிப்ப முடிக்கறதுக்குள்ளயே தட்டுத்தடுமாறிப் போயிடறோம். எப்படித்தான் இப்படியோ??? (தலைப்ப இன்னொருமுறை படிச்சு பாத்துக்கோங்க)

====================================================================

ஒரு சர்தார் வீட்டுல பூனை ஒண்ணு ரொம்ப நாளா தொல்லை பண்ணிட்டு இருந்தது. ஒரு நாள் அவர் அதைக் கொண்டுபோய் ஊருக்கு வெளில விட்டுட்டு வந்தார். வீட்டுக்கு வந்தபோது அவருக்கு முன்னால பூனை வந்திருந்தது. அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் தூரம் அதிகமா கொண்டுபோய் விட்டுட்டு வந்தார். ஆனா பாருங்க இந்தமுறையும் பூனை அவருக்கு முன்னால வீட்டுக்கு வந்திருந்தது. ரொம்ப கோபமா அதைத் தூக்கிட்டு ஊரைவிட்டு பல மைல் தொலைவில் விட்டுவருவதாக சென்றார். கொஞ்ச நேரத்தில் அவரது மனைவிக்கு ஒரு கால் வந்தது. சர்தாரேதான்.
சர்தார் : அந்த சனியன் புடிச்ச பூனை அங்க இருக்கா?
மனைவி : ஆமாங்க.
சர்தார் : அதை இங்க அனுப்பு. நான் வீட்டுக்கு வர்ற வழியை மறந்து தொலைச்சிட்டேன்.
மனைவி : ?????

23 கருத்துக்கள்:

Anonymous said...

அதை இங்க அனுப்பு. நான் வீட்டுக்கு வர்ற வழியை மறந்து தொலைச்சிட்டேன்//
hahaa

செல்வா said...

அவ்ளோ படிப்பு படிக்குறதுக்கு அவர் என்னவெல்லாம் பண்ணினாரோ ? பாவம் ..

thendralsaravanan said...

பட்டேல் படிக்கிறதுக்காகவே பிறந்திருப்பார்னு தோணுது!

கதை நல்லாயிருக்கு.

thendralsaravanan said...

உங்க ”ஆத்தாடி” மதுரைகாரவுகளா தெரியுது!

Chitra said...

Welcome back! :-)

Anonymous said...

:))

மோகன்ஜி said...

உங்கள் சிரிப்புப்பூனை அற்புதம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னய்யா ரொம்ப நாளா காணோம். தேர்தல் பிஸி?

அன்பரசன் said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றிங்க
@ கோமாளி செல்வா
:)
@ thendralsaravanan
மதுரை இல்லங்க..
ஆனா கொஞ்சம் பக்கத்துல "பழநி"
@ Chitra
@ Balaji saravana
@ மோகன்ஜி
நன்றிங்க
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
இல்ல போலீசு.
ஆணிகள் அதிகம் மற்றும் கொஞ்ச நாளாவே மனசு சரியில்லை. அதான்.

நிரூபன் said...

வணக்கம் சகோ, என்னாம் பெரிய பட்டங்கள். உண்மையான கடிதமா இது?
பூனை நகைச்சுவை அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. ரொம்ப நாளா காணோம்... உங்க ஊர்ல ஒரு ஃபிகரையும் காணோமே.. சே சே அப்ப்டி இருக்காது.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

முதல் கதை பிரமிப்பு, 2வது செம காமெடி..

அன்பரசன் said...

@ நிரூபன்
உண்மையான கடிதம் நண்பரே...
அலுவலகம் சம்பந்தப்பட்டது என்பதால் கட் பண்ணி போடவேண்டியதாயிற்று..
@ சி.பி.செந்தில்குமார்
கொஞ்சம் வேலை..
ஹி ஹி

Sriakila said...

ஆத்தாடி!! இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ படிப்பா?

ரெண்டாவது நல்லக் காமெடி போங்க...

arasan said...

வணக்கம் தல ..
முதல்ல இருந்தத பார்த்து தல சுத்தி போச்சு

Unknown said...

மன்னிக்கவும்................
படிப்பும் ஒரு போதையே ஹி ஹி!

Anonymous said...

சின்ன விஷயங்களில் அதிக ஆர்வத்தின் காரணமாக நாம் மறந்து போய் சிரப்படுவதையும், படிக்க சிரமப்படுவதையும் அழகாக சொல்லி "விட்"டீர்கள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா..
சூப்பர் பூனை கதை.. :)

அப்புறம் ஆத்தாடி பார்த்து..........

ஆத்தாடிஈஈஈஈ...எம்புட்டு.... :-))))
பொருத்தமான தலைப்புங்க..

pichaikaaran said...

சிரிப்ப்பு பூனையும், படிப்பு புலியும் சூப்பர்

Unknown said...

பூனை ஜோக்.. உண்மையிலயே சூப்பர்..

ம.தி.சுதா said...

அடடா நல்லாயிருக்கே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

ஹேமா said...

அப்பாடி....ஆத்தாடி....இவ்ளோ படிக்க எவ்ளோ பெரிய மூளை வேணும் !

பூனை வந்திடிச்சா அன்பு !

சமுத்ரா said...

hmmm :)