நீ வைத்திருக்கிறாய் என்பதற்காக நானும் தொடங்கினேன் ஆர்குட் பேஸ்புக் எஸ்பிஐ என பல அக்கவுண்ட்களை.. ஆனால் நம் காதல் அக்கவுண்ட்டை தொடங்க மட்டும் ஏன் மறுக்கிறாய் நீ?
அன்றொரு நாள் மதிய வேளையில் சூரியக் கதிரிலிருந்து உனைக் காக்க கண்களை மட்டும் விட்டு விட்டு முகம் மறைத்து வந்தாய் நீ! இனிமேல் வரும்போது முகம் முழுதாய் மறைத்து விடு! இல்லையேல் முகத்திரையை விலக்கி விடு! உன் கண்கள் எனும் கதிர்வீச்சில் கருகிச்சாயும் என் போன்றோர் உயிர் பிழைக்க வேண்டி!