Pages

Tuesday, December 7, 2010

இருதுளி


நானும் உங்களைப்போல்
நேர்நடை நடந்திருப்பேன்
ஓடியாடி மகிழ்ந்திருப்பேன்
பிறரை சாராமல் இருந்திருப்பேன்
தனியே ஒதுக்கப்படாமல் இருந்திருப்பேன்
என் நட்புவட்டமும் விரிந்திரிக்கும்
உலக அனுபவம் கிடைத்திருக்கும்
குறைந்தது வாழவாவது செய்திருப்பேன்
எனக்கும் இருதுளி கிடைத்திருந்தால்....

34 கருத்துக்கள்:

pichaikaaran said...

கடைசி வரி ட்விஸ்ட்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல வரிகள் நண்பரே..

எல் கே said...

நலல் வரிகள் நண்பரே. வாழ்த்துக்கள்

R. Gopi said...

ஒருமுறை வைரமுத்து பாட்டிற்கும் கவிதைக்கும் வித்தியாசம் என்னவென்று விளக்கும்போது சொன்னது ஞாபகம் வருகிறது.

உங்களின் இந்தப் படைப்பில் முதல் எட்டு வரி பாடல்கள். கடைசி வரி கவிதை.

வாழ்த்துக்கள்.

nis said...

கொஞ்சம் கவலை :(

Chitra said...

உணர்வுகளின் வெளிப்பாடு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

good வரிகள் நண்பரே. வாழ்த்துக்கள்

இம்சைஅரசன் பாபு.. said...

கடைசி வரி அருமை அன்பரசன் ......சூப்பர் ......

Anonymous said...

நல்லாயிருக்கு அன்பு.
//Gopi Ramamoorthy said...
ஒருமுறை வைரமுத்து பாட்டிற்கும் கவிதைக்கும் வித்தியாசம் என்னவென்று விளக்கும்போது சொன்னது ஞாபகம் வருகிறது.//

கோபி இதைப் பற்றி விரிவா ஒரு பதிவு போடுங்க. :)

Anonymous said...

நல்ல வரிகள் அன்பரசன்

test said...

//குறைந்தது வாழவாவது செய்திருப்பேன்
எனக்கும் இருதுளி கிடைத்திருந்தால்//
மனது கனக்கும் வரிகள்!

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை அன்பரசன்.

சிவசங்கர். said...

Anbu-Arumai...

Sriakila said...

இதைக் கவிதையாக மட்டுமே பார்க்க முடியவில்லை. படத்திற்கு பொருந்திய வரிகள், அந்தப் பையனின் மன வலிகளை உணர வைக்கிறது.

அருண் பிரசாத் said...

நல்ல வரிகள்...

உணர்வுபூர்வமாக இருந்தது...

வைகை said...

நல்ல கவிதை அன்பரசன்! தொடருங்கள்!

arasan said...

உண்மையான வரிகள்...
உங்களின் கவி வரிகள் ரொம்ப நல்லா இருக்குங்க அன்பரசன்..
வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் கவிபயணம்...

a said...

மனதை பிசயும் நிஜம்......

செல்வா said...

//குறைந்தது வாழவாவது செய்திருப்பேன்
எனக்கும் இருதுளி கிடைத்திருந்தால்..../

போலியோ சொட்டு மருந்து பத்தி இத விட அழகா யாரும் கவிதை சொல்ல முடியாது ..!!

ராஜி said...

ஐயோ சான்சே இல்லைங்க. நான்கூட கவிதை ன்ற பேர்ல கிறுக்குவேன். அதில்கூட உங்களைப்போல் சமுதாய சிந்தனை அதிகம் வெளிப்படாது. மகிழ்ச்சி. நன்றி

வினோ said...

உண்மை தாங்க.. இரு துளி அனைவருக்கும் வேண்டும்...

அன்பரசன் said...

@ பார்வையாளன்
@ பதிவுலகில் பாபு
@ வெறும்பய
@ LK
நன்றிங்க.

@ Gopi Ramamoorthy
விளக்கத்திற்கு நன்றி நண்பரே

@ nis
@ Chitra
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@ இம்சைஅரசன் பாபு..
நன்றிங்க.

அன்பரசன் said...

@ Balaji saravana
//கோபி இதைப் பற்றி விரிவா ஒரு பதிவு போடுங்க. :)//
வரவேற்கிறேன்.
@ கல்பனா
@ ஜீ...
@ ராமலக்ஷ்மி
@ சிவசங்கர்.
@ Sriakila
@ அருண் பிரசாத்
@ வைகை
நன்றி நண்பர்களே!

அன்பரசன் said...

@ அரசன்
@ வழிப்போக்கன் - யோகேஷ்
@ ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி
@ ராஜி
//ஐயோ சான்சே இல்லைங்க.//
அவ்வளவு பெரிசா ஒண்ணும் எழுதிடலைங்க.
@ வினோ

அனைவருக்கும் நன்றி.

அன்பரசன் said...

நேற்று முன்தினம் வேலை முடிந்து திரும்புகையில் வழியில் (போலியோவால் பாதிக்கப்பட்ட) ஒரு வாலிபனை பார்க்க நேர்ந்தது.
அதன் விளைவே...

மோகன்ஜி said...

அன்பு! இந்தக் கவிதை போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு மையங்களில் பேனராய் வைக்க வேண்டும்

ஜெயசீலன் said...

மிக ஆழமானக் கவிதை நண்பா... பாராட்டுக்கள்...

Anonymous said...

excellent friend...nice thuught!

Anonymous said...

ஆழமான சிந்தனை..அற்புதமான கருத்து!

ரிஷபன் said...

அருமையான கவிதை..

அன்பரசன் said...

@ மோகன்ஜி
@ ஜெயசீலன்
@ padaipali
@ ரிஷபன்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

Unknown said...

superb..

அஹ‌ம‌து இர்ஷாத் said...

ஆழ‌மான‌ க‌ருத்து..

ஹேமா said...

அன்பு...யாரின் தவறு இது !