ஊரிலிருந்து திரும்ப டிக்கெட்(தட்கல்) எடுக்க ரயில்வே ஸ்டேசன் போயிருந்தப்ப மணி ஏழு நாப்பது ஆயிருந்துச்சு. கவுன்ட்டர் திறக்க இருபது நிமிசம் ஆகுங்கிரதால போயி வரிசையில இடம் புடிச்சேன். ஏழாவது ஆளாக இடம் கெடச்சுது. எப்போதும் காலியாகக் கிடக்கும் ரிசர்வேசன் கவுன்ட்டர் அப்போ நிரம்பி வழிஞ்சுது.பக்கத்துல இருந்தவர கிளர்னதுல நிறையபேர் கோடை விடுமுறைக்கு வெளியூரிலிருந்து வந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் இப்போ திரும்பி போவதலுமே இவ்வளவு கூட்டம்னும் தெரிய வந்தது (விவரமான பயபுள்ளதான்).
ஒரு ஏழு அம்பது இருக்கும்போது பத்து பதினஞ்சு பேர் திடுதிடுன்னு வந்து ஒரு எடத்துல அடுக்கி வச்சிருந்த பேப்பர்ல சிலத எடுத்துட்டு இடையில வந்தாங்க.. நாம விடுவமா? ஏங்க நாங்கல்லாம் நிக்கிறது தெரியலையா பின்னாடி போயி நில்லுங்க என்றேன். உடனே அந்த க்ரூப்ல இருந்த ஒரு ஆள் தம்பி இதெல்லாம் நேத்து சாயந்தரமே ஃபில் பண்ணி வரிசை நம்பர் போட்டு வச்ச ஃபார்ம் (என்னா ஒரு வில்லத்தனம்?). ஆமா உங்க நம்பர் என்ன என்றார். நானோ அப்பாவியாய் 'இல்லங்க நான் இப்பதான் வந்தேங்க' என்றேன்.வரிசைல பின்னாடி போயி நில்லுங்க அப்படின்னு சொல்லிட்டே இடையில வந்துட்டார். உடனே முன்னாடி நின்றிருந்தவங்க சிலர் எதிர்ப்பு தெரிவிச்சு வரிசைல பின்வாங்க மறுத்தாங்க.பின் ஒரு பெரிய சலசலப்புக்கு அப்புறம் எல்லாரும் சேர்ந்து நேத்து வச்சுட்டு போனவங்கதான் முன்னாடி நிக்கணும், இன்னிக்கு வந்தவங்க எல்லாம் வந்த நேரத்து அடிப்படையில நிக்கணும்னு முடிவு பண்ணினோம் (பண்ணினோம் இல்ல பண்ணினாங்க. ஏன்னா மெஜாரிட்டி அவங்க பக்கம்தான்). அப்படி நின்னதுல எனக்கு பத்தொன்பதாவது இடம் கிடைச்சது. சரி வேற என்ன பண்ணன்னு அப்படியே போனேன். ஒரு வழியா கவுன்ட்டர தொட்டு டிக்கெட் கேட்டா தட்கால் வெயிட்டிங் 117 புக் பண்ணவான்னு கேக்குறாரு.
நான் உடனே வேண்டாம்னு சொல்லிட்டு திரும்பிட்டேன். அவர் நாளைக்காவது முதல் பத்துக்குள்ள வாப்பா அப்பதான் இந்த ரயில்ல கெடைக்கும்னு சொன்னார்.நாளைக்கு டிக்கெட்னா இன்னும் ஒருநாள் லீவு போடனுமேன்னு கடுப்புல வீட்டுக்கு போனேன். ஆனா அன்னைக்கு சாயந்தரம் போயி ஒரு ஃபார்ம் ஃபில் பண்ணிட்டு நம்பர் போடலாம்னு பார்த்தா ஏற்கனவே ரெண்டு ஃபார்ம் இருக்கு (இவனுங்கல்லாம் தூங்குரதே இங்கதான் போல).பிறகு எனக்கு மூணாவது நம்பர போட்டு வச்சுட்டு திரும்பினேன். மறுநாள் காலை கொஞ்ச விவரமா ஆறரை மணிக்கே போயிட்டேன் (விவரம்ல). அங்க அப்பவே பதினஞ்சு பேர் நின்னுட்டு இருக்காங்க.நானும் நம்ம நம்பர்தான் மூணு ஆச்சேன்னு சந்தோசமா இருந்தேன். ஆனா பாருங்க ஒரு ஏழரை மணி இருக்கும்போதுதான் அந்த ஏழரை ஆரம்பிச்சுது. அங்க இருந்தவங்க எல்லாரும் சேந்து ஒரு புது ரூல்ஸ் உருவாக்கினாங்க (????).
அது என்னானா இன்னிக்கு யார் மொதல்ல வந்தங்களோ அவங்கதான் மொதல்ல நிக்கனும், மத்தபடி நேத்து வந்து வச்சுட்டு போனதெல்லாம் செல்லாது (என்னமா ஏமாத்துறானுவ). எனக்கும் என்னை போலே நேத்து வச்சுட்டு போனவங்களுக்கும் வந்ததே கோபம். என்னங்க தினம் ஒருமாதிரி பண்ணா எப்படிங்கன்னு கேக்க அதுக்கு ஒருத்தர் சொன்ன பதில் இதோ "தம்பி நான் நைட் 2 மணில இருந்தே இங்கதான் இருக்கேன். காலைல வந்துட்டு பேச்சபாரு. போப்பா போயி பின்னாடி நில்லு" (அங்கயே குடியிருப்பாங்க போல).அப்பறம் பெரிய சலசலப்புக்கு அப்புறம் அவரவர் உடல் வலிமைக்கு தகுந்த மாதிரி வரிசைல நின்னுட்டாங்க. அதுல எனக்கு 21ஆவது இடம் கெடச்சுது (நம்ம ரோமப் ஸ்ட்ராங்ல. அதான்).
டிக்கெட் கிடைக்காதுன்னு அப்பவே தெரியும். இருந்தாலும் ஒரு நப்பாசைல வரிசைல போயி கவுன்ட்டர்ல நின்னா ரிக்ரெட்டடு-னு சொல்றாங்க. டிக்கெட்டும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு செம கடுப்புல வெளில வரைல பக்கத்துல நின்னுட்டுருந்த ஒருத்தர் மொபைல்ல இருந்து
"ஹஹா... ஹஹா.... ஐ ம் ஹேப்பி..... ஸ்டார்ட் ம்யூஸிக்".
31 கருத்துக்கள்:
எளியோரை வலியோர் மேய்க்கும் உலகம் இது, என்பதை புரிந்துக்கொள்ள இது உங்களுக்கு ஒரு வாய்ப்பு
சின்ன விசயத்தை கூட விளாவாரியா யாரும் சொல்ல மாட்டாங்க...அனுபவம் பேச வைக்குதுல்ல...
டிக்கெட் கிடைக்காம நான் பஸ்லதான் இப்பல்லாம் போறது
nice!
நல்ல அனுபவம் நண்பரே...
நல்ல பகிர்வு
சில நேரம் இல்லை
பல நேரம் எப்படித்தான்..
கடையிசில உங்க கமெடி ரசித்தேன் அண்ணா
அன்பு...உங்க அனுபவம் எங்களுக்குச் சிரிப்புத்தான் !
உங்க சோக அனுபவம் எங்களுக்கு செம காமடி ஆயிடுச்சே :)
அங்கதம் ...
@ ராஜி
சரியா சொன்னீங்க..
@ thendralsaravanan
ஆமாங்க.
@ Gopi Ramamoorthy
இது நல்ல ஐடியாவா இருக்கே..
ஆனா 2200 கிலோமீட்டர் பஸ்ல வரமுடியாதுங்களே!
@ Samudra
@ வினோ
நன்றி
@ siva
நன்றிங்க சிவா
@ ஹேமா
@ Balaji saravana
காமெடியா ஆயிப்போச்சே..
என்ன பண்ண?
சிரிக்க வேண்டியதுதான்...
@ கே.ஆர்.பி.செந்தில்
"அங்கதம்"
அர்த்தம் புரியல தல.
தேடிப் பார்க்கிறேன்.
super post. hehe
அனுபவம் .... பகிர்வுக்கு நன்றி நண்பரே
பக்கத்திலே ஏஜென்ட் இருந்திருப்பார்.போர்டேர்கிட்டயோ,t .t கிட்டயோ கேட்டிருந்தா எக்ஸ்ட்ரா பைசா வாங்கிகிட்டு,அழகா அன்னிக்கே ஊருக்கு வந்திருக்கலாம்.எப்படித்தான் இந்த உலகில்.........
அப்படியும் இல்லன்னா மாயவரத்தான் சொல்லற மாதிரி online -இல் ஆவது வாங்கியிருக்கலாம்.
டிக்கெட் கிடைக்காதது ரொம்பக் கடுப்பாக இருந்தாலும்... அதை நகைச்சுவையாகக் கொடுத்திருக்கீங்க.. நல்லாருக்கு பதிவு..
டிவிட்டர் மூலமே இங்கு வந்திருக்கிறேன்..
இருந்தாலும் உங்க டிக்கெட் கதை ஒரு சேரன் படம் போல சோகமா இருந்தாலும் கடைசியில சந்தர்.சி. படம் மாதிரி முடியிது.. அடுத்த தடவயாச்சும் ட்ரைவர்கிட்ட சீட் கிடைக்குதான்னு கேளுங்களேன்...
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@ அரசன்
நன்றிங்க.
@ thamizhan
நீங்க சொன்னதெல்லாம் பெரிய ரயில்நிலையங்களில் மட்டுமே நடக்கும்.
நான் சொன்ன இடத்துல இதெல்லாம் பாசிபில் இல்லை.
அதனாலதான் நான் போக வேண்டியதாயிற்று.
@ பதிவுலகில் பாபு
நன்றிங்க.
@ தம்பி கூர்மதியன்
நான் ட்விட்டர்ல எல்லாம் இல்லீங்களே!!!!
அப்புறம் எப்படி??
இருப்பினும் நன்றி.
http://twitter.com/#!/mayavarathaan
இந்த முகவரியுடையார் தான் அனுப்பினார்.. அவரின் கமெண்ட ட்விட்டரில் பின்வருவனவாக இருந்தது..
//இம்புட்டு வெவரமா பதிவு போடுற புள்ள ஆன்லைன்ல வாங்கினா என்னவாம்?! http://tamizhanbu.blogspot.com/2010/12/blog-post_26.html.//
உங்கள் நிலைமையை பார்த்தால் சிரிப்பதா ஆறுதல் சொல்வதா என்று தெரியவில்லை... பினிஷிங் டச் சூப்பர்...
//பிறகு எனக்கு மூணாவது நம்பர போட்டு வச்சுட்டு திரும்பினேன். மறுநாள் காலை கொஞ்ச விவரமா ஆறரை மணிக்கே போயிட்டேன் (விவரம்ல).//
ஆறாவது பத்தில தான் உங்களுக்கு விவரமே வந்திருக்கு போல .!
//அப்பறம் பெரிய சலசலப்புக்கு அப்புறம் அவரவர் உடல் வலிமைக்கு தகுந்த மாதிரி வரிசைல நின்னுட்டாங்க. அதுல எனக்கு 21ஆவது இடம் கெடச்சுது (நம்ம ரோமப் ஸ்ட்ராங்ல. அதான்)//
அவ்ளோ ஸ்ட்ராங்கா நீங்க ..?!
தட்கலா? தடங்கலா? அருமையா சொன்னீங்க...
நடந்த நிகழ்வுகளை தெளிவாக சொல்லியிருக்கீங்க
பகிர்வுக்கு நன்றி நண்பரே
அன்பின் நண்பரே புத்தாண்டு வாழ்த்துகள்!
ஐ ம் ஹேப்பி........ ஹேப்பி நியூயியர்......
//அப்பறம் பெரிய சலசலப்புக்கு அப்புறம் அவரவர் உடல் வலிமைக்கு தகுந்த மாதிரி வரிசைல நின்னுட்டாங்க. அதுல எனக்கு 21ஆவது இடம் கெடச்சுது //
ஹா.. ஹா. இந்த அவஸ்தையை இப்படி சொல்லித்தான் தீர்த்துக்கணும் போல. ரிசர்வேஷன்ல என்ன நடக்குதுன்னு எப்ப போனாலும் புரிய மாட்டேங்குது.
yr experience is usefull to all
////இம்புட்டு வெவரமா பதிவு போடுற புள்ள ஆன்லைன்ல வாங்கினா என்னவாம்?! ///
அடேங்கப்பா,...என்னா புத்திசாலித்தனம்.
(Tatkal online booking , அது ஒரு தனி அவல சரித்திரம். )
//வார்த்தை said...
///இம்புட்டு வெவரமா பதிவு போடுற புள்ள ஆன்லைன்ல வாங்கினா என்னவாம்?! ///
அடேங்கப்பா,...என்னா புத்திசாலித்தனம்.
(Tatkal online booking , அது ஒரு தனி அவல சரித்திரம். )//
நானும் அதையே தாங்க சொல்றேன்.
அவரு ரொம்ப விவரமாம்.. அதான்
haa.haa..nice nanbaa..
Post a Comment