அதிகாலை 03:30 மணி.
வெட்பம் 3°C.
டெல்லியின் மத்தியில் உள்ள ஒரு குருகிய தெரு. இருள் சூழ்ந்து அடர்த்தியாய் இருந்தது. சுற்றுப்புறத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கடுங்குளிர் ஆட்கொண்டிருந்தது. பகல் முழுதும் ஆள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசலோடு இரைச்சலாய் இருக்கும் அத்தெரு தற்சமயம் மிக நிசப்தமாய் இருந்தது. அந்த தெருவில் மொத்தம் நான்கே பேர்.
ஒருவன் விளக்குக் கம்பத்திற்கு கீழே நின்று யாருடனோ தொ(ல்)லைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். தனது உடலை பருத்த கோட்டினால் மறைத்திருந்தான். மேலும் இருவர் தெருவோர சாக்கடைக்கு அருகே ஓரிடத்தில் பழைய பேப்பர் மற்றும் சிறுகுச்சிகளை வைத்து தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். இன்னும் ஒருவனோ தெருவின் எதிர்மூலையில் தனியே அமர்ந்திருந்தான். தன்னிடம் இருந்த சிறுதுணியின் உதவியால் உடலை மறைக்க முயன்று கொண்டிருந்தான்.
அப்போதுதான் அந்த சப்தம் கேட்டது. சப்தம் என்பதை விட அலறல் என்றே சொல்லலாம். அதுவும் ஒரு இளம்பெண்ணின் குரலில். உடனே முதலாமவன் சப்தம் வந்ததிசை நோக்கிப் பாய்ந்தான். பக்கத்தில் உள்ள குறுகிய சந்தில் போய்ப் பார்த்ததில், ஒரு பத்தொன்பது வயதுப்பெண் அசையாமல் நின்றிருந்தாள். அவளருகே ஒரு நாய்க்குட்டி நின்றிருக்க அவளோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
நாயை விரட்டி விட்டபின் திரும்ப எத்தனிக்கையில் பின்னாலிருந்து ஒரு குரல் " பஹுத் தன்யவாத் பையா" (மிக்க நன்றி அண்ணா) அவளேதான். அவனோ "சலேகா பெஹன். ஜாக்கே சோஜா" (பரவாயில்லை சகோதரி. போய்த்தூங்கு) என்றான்.
பின் சிறு புன்முறுவலுடன் மெல்ல நடந்தவாறே தனது தெருவுக்கு திரும்பினான். அங்கே அவன் கண்ட காட்சியோ வேறுவிதமாய் இருந்தது. முன்பிருந்த அதே மூன்று பேர். ஆனால் தீ அணைந்து விட்டிருந்தது. குளிர் காய்ந்துகொண்டிருந்த இருவரும் நடுநடுங்கி கொண்டிருந்தனர். கடுங்குளிர் என்பதால் அவர்களது உடம்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் குளிர் ஊடுருவி இருந்தது. இருவரின் நடுக்கத்தையும் பார்க்கவே என்னவோ செய்தது இவனுக்கு.
முடிவு : குளிர்காலம்னு இருந்தா அதில சிலபேர் நடுங்கத்தான் செய்வாங்க. அதுக்கு நாம என்னங்க பண்ண முடியும்???.
பி.கு :
1)ஒன்னுல்ல. இங்க கொஞ்சநாளாவே குளிர் ரொம்ப அதிகம். அதான் இந்தமாதிரில்லாம்.
2)கதைன்னு நெனச்சு படிச்சு ஏமாந்திருந்தா கம்பெனி பொறுப்பாகாது.
42 கருத்துக்கள்:
வடை..
இதெல்லாம் ஒரு பொழப்பா?
இங்க வந்து பாரு...
குளிரு ------ய கிழிச்சிரும்...
//வெளங்காதவன் said...
வடை..//
உனக்கே தான்..
//வெளங்காதவன் said...
இதெல்லாம் ஒரு பொழப்பா?
இங்க வந்து பாரு...
குளிரு ------ய கிழிச்சிரும்...//
ஹி ஹி புகழாதீங்க.
தனியா ரூம் போட்டு யோசுச்சிகலோ...
கைல மாட்னிக.... குளுரு காணாம போயிரும்
குளிர் ஜுரம் வந்துருச்சா என்ன? என்ன எழுதுரோன்னு தெரியாம எழுதி இருக்கீங்க...
இன்னைக்குதான் முதல் தடவையா உங்க கடைக்கு வந்தேன். வந்தன்னைகேவா. :)
@ கல்பனா
//தனியா ரூம் போட்டு யோசுச்சிகலோ...//
இல்லங்க... இப்ப இருக்குற ரூம்ல இருந்துதான்.
@ கே.ஆர்.பி.செந்தில்
//குளிர் ஜுரம் வந்துருச்சா என்ன? //
ஆமண்ணே கொஞ்சமா..
//karthikkumar said...
இன்னைக்குதான் முதல் தடவையா உங்க கடைக்கு வந்தேன். வந்தன்னைகேவா. :)//
வாங்க..வாங்க..
//கதைன்னு நெனச்சு படிச்சு ஏமாந்திருந்தா கம்பெனி பொறுப்பாகா//
உங்க கம்பனி யையும் சேர்த்து தீ வைச்சு கொளுத்த வேண்டியதுதானே .....அன்பரசன் .......
//இம்சைஅரசன் பாபு.. said...
//கதைன்னு நெனச்சு படிச்சு ஏமாந்திருந்தா கம்பெனி பொறுப்பாகா//
உங்க கம்பனி யையும் சேர்த்து தீ வைச்சு கொளுத்த வேண்டியதுதானே .....அன்பரசன் .......//
டென்சன் ஆகாதீங்க...
:)
ஓவர் குளிர் போல அதான் கை எல்லாம் நடுங்கி தன்னாலே ஏதோ டைப் ஆகி இருக்கு
பி.கு :
1)ஒன்னுல்ல. இங்க கொஞ்சநாளாவே குளிர் ரொம்ப அதிகம். அதான் இந்தமாதிரில்லாம்.
..... அப்போ, மைனஸ் டிகிரியில் இருக்கிற நாங்க, உங்களை எப்படி பழிவாங்குறதுனு யோசிக்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா....
@ பார்வையாளன்
நன்றிங்க.
@ சௌந்தர்
ஆமப்பா ஆமா
@ Chitra
நீங்களும் ஒரு பதிவு போடுங்க..
ச்சே கதைன்னா இவ்ளோ கேவலமாவா இருக்கும். இது கவிதைதான?
:-)
எங்கள பழி வாங்க உங்களுக்கு வேற வழி இல்லையா ....
இருந்தாலும் நண்பரே எழுத்து நடை நல்லா இருந்தது ...
எதையோ எதிர்பார்த்து பார்த்து படிக்கிற மாதிரி வச்சிட்டுங்க...
ஃஃஃஃஃ " பஹுத் தன்யவாத் பையா" ஃஃஃஃ
நன்றி.. நல்ல வசனம் ஒன்று கிடைத்தது..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை
ஆஹா ஏமாந்துட்டனே
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
கரெக்டா சொன்னீங்க தல.
@ ஜீ...
@ அரசன்
@ ம.தி.சுதா
@ பதிவுலகில் பாபு
நன்றி.
@ சி.பி.செந்தில்குமார்
//ஆஹா ஏமாந்துட்டனே//
:)
:) ஆரம்பத்துலையே டிஸ்கியை படிச்சு தப்பிச்சிட்டேனே...
என்னா வில்லத்தனம்???
//குளிர்காலம்னு இருந்தா அதில சிலபேர் நடுங்கத்தான் செய்வாங்க. அதுக்கு நாம என்னங்க பண்ண முடியும்???.//
:)))
என்ன நண்பா இது... இப்படி சாச்சுபுட்டீகளே...
@ philosophy prabhakaran
விவரந்தான் போங்க..
@ வழிப்போக்கன் - யோகேஷ்
//என்னா வில்லத்தனம்???//
ஹி ஹி
@ nis
நன்றிங்க..
@ வெறும்பய
என்ன நண்பா பண்றது???
வேற வழி இல்லியே...
வெளங்கிருச்சு............!
அன்பரசன் நலமா தானே இருகீரீர்? இல்ல சும்மா கேட்டேன்...
தன்னுடைய உள்ளன் சுவெட்டரை கழற்றி ஒருவனுக்கு கொடுத்துவிட்டு.. பாக்கெட்டில் வைத்திருந்த ஒரே ஒரு சிகரட்டை இன்னொரு புகைப்பவனிடம் கொடுத்துவிட்டு குளிருக்கு இரண்டு கையையும் பரபரவென்று சூடுபரக்க தேய்த்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டு ஏதோ புண்ணியம் பண்ணிய தெம்பில் அந்தக் குளிரிலும் நடு நடுங்காமல் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தான் அந்த தயாளப் பிரபு. (உங்கள் முடிவு:-க்கு முன்னாடி இதைச் சேர்த்து படித்துக்கொண்டேன்..)
@ பன்னிக்குட்டி ராம்சாமி
என்னாது?
@ வினோ
நல்லா தான் இருக்கேங்க..
@ RVS
வித்தியாசமான முடிவு தந்தமைக்கு நன்றிங்க..
அன்பு...உங்களை இங்க இழுத்திட்டு வந்து விடணும் !
ரைட்டு :))
ங்கொய்யால...
:)
ஹா.ஹா..ரொம்ப கலாய்கிறீங்க..
@ ஹேமா
ஹி ஹி...
@ Balaji saravana
ஒகே
@ ♠ ராஜு ♠
ஏன் ராஜா?
@ Gopi Ramamoorthy
:))
@ padaipali
வேரென்ன பண்ண நண்பா?
ஹா ஹா ஹா ..
உண்மைலேயே என்னால முதல்லையே கொஞ்சம் கணிக்க முடிஞ்சது ..
எப்படின்னா நீங்க இத கடைசில கதை மாதிரியே எழுதிருந்தாலும் நான் முதல் பத்தி படிக்கும் போது இத இப்படியே பில்ட் அப் பண்ணி கடைசில மொக்கைய முடிச்சா எப்படி இருக்கும் அப்படின்னு நினைச்சேன் .. நீங்க என்னோட ஆசைய நிறைவேதிடீங்க .. உண்மைலேயே எனக்கு பிடிச்சிருக்கு ..!!
என்ன கொடும சார் இது...
குளிர் காலம் ஓகே.
அடுத்து வரக்கூடிய வெயில் காலத்துல என்ன கூத்து நடக்கப்போகுதோ ?
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com
கதை எழுதும் அத்தனை தகுதியும் உங்களுக்கு ரொம்பவே இருக்குங்க!கலக்குங்க...
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்
வேணாம்..
நடுங்கிப் போயிட்டேன்!
Post a Comment