உன்னைத் தவிர
எல்லோரும் என் சகோதரியே
என்றேன்
ஏன் என்றாய்
என் உயிரை எடுக்க
நீ ஒருத்தி போதாதா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்றும் வழக்கம்போல்
என்னை எழுப்பி காப்பி தந்தாய்
ஆயினும் ஏதோ ஒரு
இனம் புரியாத மாற்றம் என்னில்
மிகுந்த யோசனைக்கிடையில்
கேட்டேன் 'நீ பல்லு வெளக்கினியா?'
படீரென இறங்கியது
உன் கையிலிருந்த தட்டு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று உன்னிடம்
அப்படி கேட்டிருக்க கூடாது!
தடபுடவென சத்தம்
சமையலறையில் இருந்து...
'என்னடி அங்க சத்தம்
அமைதியா பண்ண முடியாதா' என்றேன்.
இன்று பேண்டேஜோடு நான்!!!
இருந்தாலும்
அப்படி கேட்டிருக்க கூடாது!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு புத்திசாலி மனிதன் என்பவன் சில முக்கியமான் முடிவுகளை எடுக்கும்போது முதலில் கண்களை மூடி, நன்றாக யோசித்து, மனசு சொல்றபடி கேட்டு பின்பு இறுதியாக அவன் மனைவி சொல்வதை செய்வான்.
பி.கு : மக்கா அதனால நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லைனு நெனைக்கிறேன். புரிஞ்சு நடந்துக்கோங்க பொழச்சுக்கோங்க.
41 கருத்துக்கள்:
//'நீ பல்லு வெளக்கினியா?'//
சூப்பர்!
நல்ல அனுபவப் பதிவுகள்! புரிஞ்சுக்கிறோம்! :-)
சூப்பர்!!!
http://udleditions.cast.org/indira/docs/all_about_coyotes/glossary-images/speechless1.jpg
பி.கு : மக்கா அதனால நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லைனு நெனைக்கிறேன். புரிஞ்சு நடந்துக்கோங்க பொழச்சுக்கோங்க./////
என்ன புரிஞ்சு வேண்டும் கல்யாணம் செய்து கொள்ள கூடதா
உன்னைத் தவிர
எல்லோரும் என் சகோதரியே
என்றேன்
ஏன் என்றாய்
என் உயிரை எடுக்க
நீ ஒருத்தி போதாதா?////
உன்னை மாதிரி எல்லாம் சொல்ல முடியாது
புரிஞ்சி நடந்துக்குறோம்..பொழைக்கனுமில்ல..
என்னடா தம்பி...
கலியாணம் பண்ணிட்டியா?
ஹ ஹ ...........நல்ல இருக்கு கவிதை .அதுலேயும்
//நேற்று உன்னிடம்
அப்படி கேட்டிருக்க கூடாது!
தடபுடவென சத்தம்
சமையலறையில் இருந்து...
'என்னடி அங்க சத்தம்
அமைதியா பண்ண முடியாதா' என்றேன்.
இன்று பேண்டேஜோடு நான்!!!
இருந்தாலும்
அப்படி கேட்டிருக்க கூடாது!//
இது ரொம்ப டாப்பு
சரியான எடக்கு மடக்கு கவிதை.....!! கவிதையில் சிரிக்க வைக்கிறீங்க சகோ ....?!
ஹா ஹா :)
கலக்குற மச்சி
/அன்றும் வழக்கம்போல்
என்னை எழுப்பி காப்பி தந்தாய்
ஆயினும் ஏதோ ஒரு
இனம் புரியாத மாற்றம் என்னில்
மிகுந்த யோசனைக்கிடையில்
கேட்டேன் 'நீ பல்லு வெளக்கினியா?'
படீரென இறங்கியது
உன் கையிலிருந்த தட்டு.//
பூரிக்கட்டை உடைஞ்சதா கேள்வி..
ஒரு புத்திசாலி மனிதன் என்பவன் சில முக்கியமான் முடிவுகளை எடுக்கும்போது முதலில் கண்களை மூடி, நன்றாக யோசித்து, மனசு சொல்றபடி கேட்டு பின்பு இறுதியாக அவன் மனைவி சொல்வதை செய்வான்.
..... Thank you for sharing the secret of your happily married life. :-)
//என் உயிரை எடுக்க
நீ ஒருத்தி போதாதா?//
ஆகா..
//'நீ பல்லு வெளக்கினியா?'//
யார பாத்து என்ன கேள்வினு ஊடு கட்டியிருக்க வேண்டாமா?
@ ஜீ...
அனுபவம் இல்லங்க ஜி
@ எஸ்.கே
அந்த படம் சூப்பர்.
@ சௌந்தர்
//என்ன புரிஞ்சு வேண்டும் கல்யாணம் செய்து கொள்ள கூடதா//
நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே. எப்படி அடிவாங்காம தப்பிக்கிறதுன்னு தான் சொல்றேன்.
@ ஹரிஸ்
அப்படி வாங்க வழிக்கு.
@ சிவசங்கர்
உன்கிட்ட சொல்லாம பண்ணுவேனா ராஜா.
@ இம்சைஅரசன் பாபு..
@ Kousalya
@ Balaji saravana
நன்றிங்க.
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//பூரிக்கட்டை உடைஞ்சதா கேள்வி..//
யாரோ தப்பான தகவல் கொடுத்திருக்காங்க.
@ Chitra
//Thank you for sharing the secret of your happily married life. :-)//
For your information i am a bachelor.
@ பாரத்... பாரதி...
நன்றிங்க.
சூப்பருங்க அன்பரசன்..
அட்டகாசம்
இதெல்லாம் உங்க சொந்த அனுபவமா? இல்ல ???
அனுபவம் பேசுதா
உங்கள் அனுபவங்கள் செம காமெடி... யார் அந்த உயிரெடுக்கும் ஒருத்தி... நல்ல மாட்டிகிட்டீங்களா...
என்ன மக்கா அடி பலமோ... பாத்து சூதானமா நடந்துக்க..
//நேற்று உன்னிடம்
அப்படி கேட்டிருக்க கூடாது!
தடபுடவென சத்தம்
சமையலறையில் இருந்து...
'என்னடி அங்க சத்தம்
அமைதியா பண்ண முடியாதா' என்றேன்.
இன்று பேண்டேஜோடு நான்!!!
இருந்தாலும்
அப்படி கேட்டிருக்க கூடாது!///////////
அடி அமைதியாவா?!! இல்ல ஆர்ப்பாட்டமாவா?! அத சொல்லுங்க?!!
சிரிச்சு சிரிச்சு எங்களுக்கு வயிறுவலிச்சுப்போச்சு
கண்ணு.
@ பதிவுலகில் பாபு
நன்றிங்க.
@ பார்வையாளன்
@ ராஜி
@ philosophy prabhakaran
அனுபவம் எல்லாம் கிடையாதுங்க.
நான் இன்னும் பேச்சிலர்தான்.
@ வெறும்பய
ஆமப்பா ஆமா.
@ வைகை
பாத்தா ஆர்ப்பாட்டமதான் தெரியுது.
@ முத்துசபாரெத்தினம்
நன்றிங்க.
//அமைதியா பண்ண முடியாதா' என்றேன்.
இன்று பேண்டேஜோடு நான்!!!
இருந்தாலும்
அப்படி கேட்டிருக்க கூடாது!
//
:) அருமை
கலக்குறீங்க நண்பா
கவிதை ஜோக் சூப்பர் நண்பா
சுவையான சிரிப்பு கவிதைகள்
வாரம் ரெண்டு முறை இந்த கேட்டகரியில போடுங்க
சூப்பர்!
நல்ல அனுபவப் பதிவுகள்! புரிஞ்சுக்கிறோம்! :-//
ஹஹா
@ THOPPITHOPPI
@ padaipali
நன்றிங்க.
@ ஆர்.கே.சதீஷ்குமார்
/வாரம் ரெண்டு முறை இந்த கேட்டகரியில போடுங்க//
முயற்சிக்கிறேன்.
மூணாவது கவிதை படிச்சு நிறையச் சிரிச்சிட்டேன் அன்பு.நல்ல சிந்தனைதான் கவிதைகள் !
ஐய்யா!! same templet .........
கவிதையும் சூப்பர்
//
இறுதியாக அவன் மனைவி சொல்வதை செய்வான்.
//
அட........ அருமைங்க......
//ஏன் என்றாய்
என் உயிரை எடுக்க
நீ ஒருத்தி போதாதா?//
எப்படி எல்லாம் கவிதை எழுதுறாங்க ..?!
//அமைதியா பண்ண முடியாதா' என்றேன்.
இன்று பேண்டேஜோடு நான்!!!
இருந்தாலும்
அப்படி கேட்டிருக்க கூடாது!///
செம செம ., நீங்க அமைதியா கேட்டிருக்கலாம் ..
உங்க கவிதைகள் மூணுமே ரசிக்கும் படிய இருக்கு ..!!
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ..?
@ ஹேமா
@ கல்பனா
@ வழிப்போக்கன் - யோகேஷ்
வரவுக்கு நன்றிங்க.
@ ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி
உங்கள மாதிரி ஆளுங்க கூடஇருக்கோம்ல. அதனாலதான்.
எதுக்கு வம்பு..
உன்னைத் தவிர
எல்லோரும் என் சகோதரியே
என்றேன்
ஏன் என்றாய்
என் உயிரை எடுக்க
நீ ஒருத்தி போதாதா?////////
நல்லா இருக்கு... :)
Post a Comment