Pages

Sunday, September 6, 2009

பொன்மொழிகள் சில

சமீபத்தில் அர்த்தமுள்ள இந்துமதம் நான்காம் பாகம்(துன்பங்களிலிருந்து விடுதலை) படிக்க நேர்ந்தது.

அதில் எனக்கு பிடித்தவை சில உங்களுக்காக...


* ஓவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது மரணத்தை பற்றி சிந்திக்கிறான்.
* தயிரும் கீரையும் இரவில் தவிர்ப்பது நல்லது.
* வறுமையை விட சிறந்த பள்ளிக்கூடம் எதுவும் கிடையாது.
* இளம் வயதில் இருந்து மரண காலம் வரை ஒருவன் நடந்து கொண்டே திரிந்தால் பெரும்பாலான நோய்கள் போய்விடும்.
* இன்பமும் துன்பமும் நேரத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தவை.
* நம் நாட்டில் பெரும்பாலான பெரிய மனிதர்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள்.
* பகைவனே இல்லாமல் இருப்பது எப்படி?
சில விசயங்களை ஜீரணிக்க வேண்டும்.
சில விசயங்களை அலட்சியப்படுத்த வேண்டும்.
* ஆத்திரமூட்டும் கேள்விகளை அலட்சியமாக சமாளித்தால் பகைவனே நண்பனாகி விடுவான்.
* இனமும் குணமும் தான் முக்கியமே தவிர பணம் அல்ல.
* ரத்தத்தில் இருக்கும் மின்சார வேகம் செல்வத்திலோ , செல்வாக்கிலோ இல்லை.
* உனக்கு கீழே உள்ளவர் ஒரு கோடி , நினைத்து பார்த்து நிம்மதி தேடு.
* 'துன்பத்திலெல்லாம் குறைந்த பட்ச துன்பம் நமக்கு வந்தது தான் ' என கருதினால் எந்த துன்பமும் துன்பமாக இருக்காது.
* யாராவது தாறுமாறாக பேசினால் நீங்கள் சொல்வதே சரி என்று சொல்லுங்கள்.
* வருகின்ற துன்பங்களை எல்லாம் ஒன்று,இரண்டு,மூன்று என அனுபவங்களாக சேகரித்து கொள்ளுங்கள்.
* புதுப்புது அனுபவமாக சேகரியுங்கள் . ஒரே அனுபவத்திற்கு இரண்டு , மூன்று என மதிப்பு போடாதீர்கள்.


பின்குறிப்பு : ரூம்ல பொழுது போகம இருந்தபோது நண்பர் ஒருவர் இந்த புத்தகத்தை படிக்க சொல்லி கொடுத்தார். அதன் விளைவு தான் இது. நான் மட்டுமே இதற்க்கெல்லாம் காரணம் இல்லீங்கோ.

3 கருத்துக்கள்:

Raju said...

\\நான் மட்டுமே இதற்க்கெல்லாம் காரணம் இல்லீங்கோ.\\

கண்ணதாசனுமா..?

cheena (சீனா) said...

அன்பரச

அர்த்தமுள்ள் ஐந்து மதம் எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று - படித்து அதில் பிடித்தவைகளை இடுகையாக இட்டது சிறப்புச் செயல். பின்குறிப்பு தேவை இல்லை.

நல்வாழ்த்துகள்

அன்பரசன் said...

உங்கள மாதிரி ஊக்கம் கொடுக்க ஆட்கள் இருந்தால் இன்னும் நிறைய புத்தகங்களை படித்து அவற்றில் சிறந்ததை பதிவாக இடுவேன். நன்றி