Thursday, September 3, 2009
ஆசை
வசித்திட ஆசை!
தாய் தந்தையோடு
அதே பழைய ஓட்டு வீட்டில்....
பருகிட ஆசை!
அதிகாலையில்
சகோதரி தரும் தேனீரை...
ருசித்திட ஆசை!
அம்மா கையால் சமைத்த
அறுசுவை உணவை...
திளைத்திட ஆசை!
குடும்பத்தாரின்
பாசம் மற்றும் பரிவினில்...
உழைத்திட ஆசை!
வியர்வை சிந்த
சொந்த நிலத்தினில்...
சுற்றிவர ஆசை!
சொந்த ஊரை
பழைய நண்பர்களோடு...
உறங்கிட ஆசை!
நிம்மதியாய்
எனது பழைய கயிற்று கட்டிலில்...
கிடைத்திட ஆசை!
விரைவினில்
இவை அனைத்தும்...
- அன்பரசன்
2 கருத்துக்கள்:
ஆகா ஆகா அன்பின் அன்பரச
நச்சென்ற இறுதி ஆசை அற்புதம்
நல்வாழ்த்துKஆள்
நன்றி சீனா ஸார்
Post a Comment