Pages

Saturday, December 5, 2009

அம்மா



சுழலும் நாற்காலி
பளபளக்கும் மேஜை
பளிங்கு தரை
வண்ண திரைச்சீலை
ஆர்டர் கேட்க பவ்யமாய் சர்வர்
விதவிதமாய் உணவு வகைகள்
கை நிறைய பணம்
இத்தனையும் இருந்தும்
மனம் ஏங்குகிறது
"கண்ணு பழைய சோத்துல தண்ணி
ஊத்தி வச்சிருக்கேன்.
தயிர ஊத்தி ஒரு வாய் சாப்பிட்டு போடா"
என்ற அம்மாவின் காலை நேர குரலுக்காக...


- அன்பரசன்

3 கருத்துக்கள்:

Raju said...

உண்மைதான்..!

cheena (சீனா) said...

அன்பரச

காலை உணவாக நேற்றைய சாதத்தில் நீர் ஊற்றி வைத்து - இன்று காலை தயிர் ஊற்றி - வெங்காயமும் ஊறுகாயும் மிளகாய் வத்தலும் சாப்பிடும் இன்பம் - அதுவும் அம்மா அன்புடன் கொடுக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி

நல்வாழ்த்துகள் - அசைபோடும் நினைவுகளுடன்

அன்பரசன் said...

உங்களுக்கும் இதே நினைவா. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி