Pages

Monday, June 21, 2010

ராவன் - ஒரு பார்வை

மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் மற்றும் பலரது நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்துள்ள படம் தான் ராவன்.


கதை நீங்கள் ஏற்கனவே பல விமர்சனங்களில் படித்திருப்பீர்கள். அதனால் நேரடியாக விசயத்துக்கு வருவோம்.

ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தனி முத்திரை பதித்து இருக்கிறார். கடத்தி வந்து
கண்கட்டை அவிர்க்கும் காட்சியில் அவர் கண்களில் காட்டும் எக்ஷ்ப்ரெஷன் இருக்கே அப்பப்பா பிரமாதம்.
தமிழில் பிரித்விராஜ் செய்த கேரக்டரை இந்தியில் விக்ரம் செய்துள்ளார். விக்ரம்
போலீஸ் அதிகாரியாக சரியாக பொருந்துகிறார். விக்ரம் சொந்த குரலில் ஹிந்தி பேசி நடித்து இருக்கிறார். சில இடங்களில் உச்சரிப்பு சரியாக இல்லாவிட்டாலும் நன்றாகவே பேசுகிறார். வாழ்த்துக்கள்.
ராவணனனாக அபிஷேக் அசத்துகிறார்.ஐஸ்வர்யா மீது காதல் வரும் போதும்
சரி, விக்ரம் மீது கோபம் வரும் போதும் சரி அளவான நடிப்பை தந்துள்ளார்.விக்ரம், அபிஷேக் இருவருமே ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
காட்சியமைப்பு மற்றும் ஆர்ட் மிகப்பெரிய பலம். அதற்கேற்ப ஒளிப்பதிவில்
மிரட்டுகிறார் சந்தோஷ் சிவன்.
பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை. படத்தில் பாடல்களின் வரிசை
(sequence) சரியாக இல்லாதது ஒரு பின்னடைவு.
விக்ரம் மற்றும் குழுவினர் ஏன் அபிஷேக் கொல்ல வருகின்றனர், அபிஷேக்-ன் தங்கையை (பிரியாமணி) ஏன் கடத்தி செல்கின்றனர் என்பதற்கான
பின்னணி சொல்லப்படாதது மிகப்பெரிய மைனஸ்.இவற்றால் திரைக்கதையில் ஏற்படும் தொய்வை தவிர்க்க இயலவில்லை.

மொத்தத்தில் பழைய மணிரத்னத்தை இதில் காண இயலவில்லை என்பது
உறுதி.

2 கருத்துக்கள்:

Chitra said...

மொத்தத்தில் பழைய மணிரத்னத்தை இதில் காண இயலவில்லை என்பது உறுதி.

..... நச்!

அன்பரசன் said...

நன்றி சித்ரா மேடம்