சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ரோனி ஸ்குருவாலா தயாரித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி ஹ்ருதிக், ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்து ஹிந்தியில் வெளிவந்துள்ள படம்தான் குஜாரிஷ்.
நண்பனின் சதியின் காரணமாக ஒரு விபத்தில் சிக்கி பதினான்கு வருடங்களாக க்வாட்ரிப்லிஜியா நோயால் அவதிப்படும் நாயகன் ஹ்ருதிக் மெர்ஸி கில்லிங்க்காக கோர்ட்டில் அப்ளை செய்கிறார். ஆனால் கோர்ட் அதற்கு மறுத்து பெட்டிஷனை ரத்து செய்கிறது. இதனால் சிறிதுகாலம் அமைதியாக இருக்கும் நாயகன் பின்பு தனது ரேடியோ ரசிகர்களின் உதவியுடன் மீண்டும் மெர்ஸி கில்லிங்க்காக அப்ளை செய்கிறார். அதன்பின்பு அவருக்கு என்ன தீர்ப்பு கிடைக்கிறது மற்றும் அவரது முடிவு என்ன என்பதே கதை.
புகழ்பெற்ற மேஜிசியனாக வருகிறார் ஹ்ருதிக். அவரது வளர்ச்சி பொறுக்காமல் அவரது நண்பர் சித்திக் ஒரு ஷோவின்போது விபத்தை ஏற்படுத்தி விடுகிறார். அதன் காரணமாக கழுத்துக்கு கீழே உணர்வற்று போய்விடுகிறது. நோயுடனே பதினான்கு வருடங்களை கடத்துகிறார். இடையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரேடியோ ஜாக்கியாக வேலை செய்து அதிலும் புகழ்பெறுகிறார்.
நடிப்பில் அசத்தி இருக்கிறார் ஹ்ருதிக். ஒவ்வொரு காட்சியிலும் அவர் கண்கள் பேசுகின்றன. அவர் படும் அவஸ்தையை நமக்கு தனது முகம் மூலமாகவே வெளிப்படுத்துகிறார். நாயகனை பராமரிக்க வரும் செவிலியராக ஐஸ்வர்யா ராய். ஐஸ்க்கு நீண்டநாள் கழித்து நடிப்புத்திறமையை காட்ட ஒரு நல்ல வாய்ப்பு இந்த கதாபத்திரம். ஐஸ் ஹ்ருதிக் உடன் போட்டி போடுகிறார் நடிப்பில். இவர்கள் இருவருக்கும் இடையிலான காட்சிகள் ஒவ்வொன்றும் அருமை.
சித்திக்கின் மகனாக வரும் ஆதித்யா ராய் கபூரும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். நாயகனின் வக்கீல் நண்பியாக வரும் ஷெர்னா பட்டேல் நட்புக்கு புது அவதாரமாக திகழ்கிறார்.
படம் முழுக்க கோவாவில் படமாக்கியிருப்பதால் ஒவ்வொரு காட்சியிலும் கண்ணுக்கு குளிர்ச்சி இயல்பாகவே வருகிறது (அந்த குளிர்ச்சி இல்லை. இது இயற்கை). வித்தியாசமான கதைக்களம் என்பதால் இயக்குநர் திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது.
வழக்கமான திரைப்படங்களை போல இதில் எந்த மசாலாத்தனமும் கிடையாது. இந்த படத்தை ரசிப்பதற்கு பொறுமை மிக அவசியம். மொத்தத்தில் கலாரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்து. ஒவ்வொரு ரசிகனும் தவறாமல் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். (இந்த வருடத்தில் நான் பார்த்த மொத்த இந்தி படங்களிலேயே சிறந்ததாக இதனை சொல்லலாம்.)
24 கருத்துக்கள்:
எனக்கும் அவலாக இருக்கிறது சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கிறேன்...
ஆட எனக்குத் தன் சுடு சோறு....
ஏன் சகோதரா மற்ற முக்கிய வாக்குப்பட்டைகளையும் இணைக்கலாமே...
நெஞ்சை தொட்ட கதை
//அந்த குளிர்ச்சி இல்லை. இது இயற்கை//
நக்கலூ...ம்ம்ம். நடக்கட்டும்... :)))
ஒருக்கா பார்க்கத்தான் வேணும்.
அருமையான திரைப்படத்தை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி. இதுபோன்ற கதைகளை தமிழில் எப்போது முயற்சி செய்வார்களோ?
வழக்கமான திரைப்படங்களை போல இதில் எந்த மசாலாத்தனமும் கிடையாது. இந்த படத்தை ரசிப்பதற்கு பொறுமை மிக அவசியம். மொத்தத்தில் கலாரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்து.
...... Looks like an interesting movie. I will try to watch it, whenever I can.
நல்ல விமர்சனம்..நல்ல படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பா..
அருமையான கதையாக உள்ளது. நன்றாக விமர்சித்துள்ளீர்கள். பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.
// இதனால் சிறிதுகாலம் அமைதியாக இருக்கும் நாயகன் பின்பு தனது ரேடியோ ரசிகர்களின் உதவியுடன் மீண்டும் மெர்ஸி கில்லிங்க்காக அப்ளை செய்கிறார்//
ஓ , அவரு ரேடியோ ஜாக்கியா ..?
/. (இந்த வருடத்தில் நான் பார்த்த மொத்த இந்தி படங்களிலேயே சிறந்ததாக இதனை சொல்லலாம்.)
//
ஆனா நான் இந்திப்படமே பார்க்கறது இல்ல , ஏன்னா எனக்கு இந்தி தெரியாது ..!!
நல்ல விமர்சனம்.. நன்றி..
பார்த்துடறேன்....
@ ம.தி.சுதா
எனக்கு வாக்குப்பட்டைகளில் அதிக நாட்டம் இல்லை நண்பா.
@ யாதவன்
@ டெரர்-பாண்டியன்
@ நிஸ்
@ ராஜி
@ சித்ரா
@ படைப்பாளி
@ ராமலக்ஷ்மி
@ ப.செல்வக்குமார்
ஆமா செல்வா. ரேடியோ ஜாக்கியேதான்.
@ பதிவுலகில் பாபு
@ அருண் பிரசாத்
அனைவருக்கும் நன்றி.
n.ce
சுருக்கமாகச் சொல்லி,பார்க்கும் ஆவலைத் தந்திருக்கிறீர்கள் அன்பு !
கண்டிப்பா பார்க்கிறேன்...
:)present sir...
நல்ல விமர்சனம் அன்பு!
@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
@ ஹேமா
@ கே.ஆர்.பி.செந்தில்
@ சிவா
@ மோகன்ஜி
அனைவருக்கும் நன்றி.
இந்தப் படம் பாக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. உங்க விமர்சனம் என்னோட ஆர்வத்தை அதிகப்படுத்திடுச்சி.. கண்டிப்பா பாக்கறேங்க..
உங்களின் இந்த பதிவை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_03.html
நனறி
@ பிரியமுடன் ரமேஷ்
பாருங்க.
@ அருண் பிரசாத்
ரொம்ப நன்றி தல.
Post a Comment