முதலில் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த வருடத்தின் முதல் நாள் இனிதாகவே கழிந்தது. புதுவருட கொண்டாட்டத்திற்கு என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் என்னோடு அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஓருவர் அவரது திருமணத்திற்கு அழைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அவரது திருமணம் ஒன்றாம் தேதி அன்று இருந்ததால் இந்த 1111ஐ வித்தியாசமாக கொண்டாடும் விதத்தில் அங்கு செல்வதென தீர்மானிக்கப்பட்டது. திருமணமோ மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரின் அருகில் தேவ்லா அருகே ஒரு கிராமத்தில் நடைபெருவதாக இருந்தது. இருப்பினும் நாங்கள் பன்னிரண்டு பேர் சேர்ந்து ஒரு வண்டி ஏற்பாடு செய்து 31/12/2010 அன்று இரவு 9 மணிக்கு கிளம்பினோம்.
அந்த குழுவில் நான் மற்றும் எனது அறை நண்பர்கள் இருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா-வை சேர்ந்தவர்கள். ஒன்றரை நாள் மராட்டி பேசும் மக்களுக்கிடையே எவ்வாறு கடத்துவது என்ற பலத்த யோசனையுடனே கிளம்பினோம்.
வண்டியில் செல்லும்போதே அனைவரும் அவரவர் நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் பொருட்டு தத்தமது அலைபேசியுடன் ஐக்கியமாயிருந்தனர். இரவு 11:30 மணிக்கு வண்டி ஒரு பாரில் நின்றது (நிறுத்தப்பட்டது). வட்டமேசை, சீரியல் லைட், மெல்லிய விளக்கு வெளிச்சம் என அமர்க்களமாய் ஆரம்பித்தது (அந்த குரூப்பிலேயே நானும் ஒரு நண்பரும் தான் பாவம், சரக்கு அடிக்கல அதான்). சரியாய் பன்னிரெண்டு மணிக்கு சியர்ஸ் சொல்லி ஆரம்பித்தது பார்ட்டி. கேர்ள் பிரண்டு இருந்தவர்களுக்கு அந்த நடுநிசியிலும் ஃபோன்கால். பின் ஒரு ஒன்றரை மணி அளவில் அங்கிருந்து கிளம்பினோம். விடிகாலை ஐந்தே முக்கால் மணி அளவில் மணப்பெண் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் (இங்கெல்லாம் கல்யாணம் பொண்ணு வீட்டுலதான் நடக்குமாம்).
அந்த இடம் பார்த்த உடனே எல்லோருக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. காரணம் என்னவெனில் பச்சைப்பசேல் என ஒரு பக்கா கிராமத்துக்கான தகுதியுடன் இருந்தது. அந்த நேரத்தில் அங்கிருந்த அனைவரும் தூங்கிக்கொண்டிருந்ததால் (காலங்காத்தால தூங்காம என்ன பண்ணுவாங்களாம்) நாங்களும் அவர்களை தொந்தரவு செய்யாமல் வண்டியிலிருந்து இறங்கி அங்கிருந்த குப்பை கூளங்களை வைத்து தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தோம்.
பின்பு ஒரு வழியாக அந்த வீட்டுக்கதவு திறந்து ஒவ்வொருவராக வெளியே தலைகாட்ட ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் வந்து எங்களை யார்? என்ன? என விசாரித்து விட்டு சென்று விட்டார் (பன்னிரண்டரை மணி கல்யாணத்திற்கு ஆறு மணிக்கே வந்தா அப்படித்தான் இருக்கும்). குளிர் வேறு பயங்கரமாய் வாட்டிவதைத்து கொண்டிருக்கவே மணமகனுக்கு ஃபோன் செய்தோம்.
அடுத்த வினாடியே அங்கிருந்த ஒரு இளைஞருக்கு (மணமகளின் சகோதரன்) ஒரு அழைப்பு வந்தது. அதற்கடுத்த நிமிடங்களில் சுடச்சுட காப்பியும், பிஸ்கட்டும் வந்தது. பின் பல்துலக்க பேஸ்ட் மற்றும் குளிக்க வெந்நீர் என சகலமும் தேடி வந்தது (மாப்பிள்ளை கெத்து). குளித்து முடித்த பின்பு தான் கவனித்தோம் அந்த வீட்டில் கல்யாண வீட்டிற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
நம்ம ஊர்ல கல்யாணம்னா பல நாட்களுக்கு முன்னயே பந்தல் தோரணம்னு ஜமாய்ச்சுருவாங்க. ஆனா அங்கயோ நிலைமை தலைகீழ். எல்லோரும் தத்தமது வேலைகளில் மும்முரமாய் இருந்தனர். அப்புறம் அந்த ஊரை சுற்றி பார்ப்போமே என வெளியே கிளம்பினால் அதிர்ச்சி. அங்குள்ள பெரும்பாலான வீடுகள் இடிந்த நிலையில் இருந்தன.
பின்பு பசி காரணமாக வண்டியை எடுத்துக் கொண்டு வந்த வழியிலேயே பதினைந்து கிலோமீட்டர் தள்ளி போய் காலை உணவு உண்டோம் (காலை உணவுன்னா ரொம்ப இமாஜினேசன் பண்ண வேண்டாம். ரெண்டு உருளைக்கிழங்கு போண்டாவும் கொஞ்சம் மிளகாயும்தான்).
திரும்பி வந்தபோது பந்தல் போட்டுக் கொண்டிருந்தனர். பந்தல், மணமேடை, உணவு உண்ணும் இடம் என அனைத்தும் ஒரு காட்டில் தயாராகிக் கொண்டிருந்தது. அதன்பின் மணமகன் வரும்வரை அங்கும் இங்கும் பராக்கு பார்த்து கொண்டு திரிந்தோம்.
சரியாய் பதினொன்றரை மணிக்கு ஒரு ஃபோன்கால்.
தொடரும்....
{ பதிவின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக பிரிக்க வேண்டியதாயிற்று. பொருத்தருள்க.}
19 கருத்துக்கள்:
பயணம் தொடரட்டும் அடியேனின் காத்திருப்பும் தொடரும்..
எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்பு.. பொறுத்தருளியாச்சு.சீக்கிரம் சொல்லுங்க மிச்சத்தை !
அட இப்படியா வெட்டு போடுறது?
வித்தியாசமான நிகழ்ச்சிதான். இன்னும் நிறைய புகைப்படங்களுடன் விரைவில் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்.
இது சும்மா ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் அடுத்த பாகத்தில்தான் இருக்கு... கரெக்டா...
அன்பரசன் நீங்கள் ரொம்ப நல்லவரு
வெயிட்டிங் :)
புத்தாண்டை வித்தியாசமாகத்தான் கொண்டாடியிருக்கீங்க.. கல்யாணம்னு போனால் இப்படி சிலசமயம் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும்.. அதான் ஞாபகத்துலயே இருக்கும்.. சரி 11 மணிக்கு என்ன ஆச்சுன்னு சீக்கிரம் சொல்லுங்க..
புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பரசன்....
என்ன பொசுக்குனு தொடரும் போட்டுடீங்க?????????????
பயணம் சூப்பர்! தொடருங்கள்! :-)
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உங்களது அனுபவங்கள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. மேலும் ஆவலுடன் இருக்கிறோம்.
தொடருங்கள்...
இன்னும் விரிவா எழுதுங்க . நல்லா இருக்கு
எல்லோரும் ஆவலாய் காத்துக்கிட்டு இருக்கும்போது , “ எல்லாம் கனவுதான்” அப்ப்டின்னு ஏமாத்திடாதீங்க!(போட்டோல்லாம் போட்டுருக்கீங்க...)
நல்லா எழுதிருக்கிங்க...
சீக்கிரம் அதையும் எழுதுடுங்க
என்னாது தொடருமா சீக்கிரம் போடு மாப்பு....
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
அன்பரசன், அப்புறம் என்னாச்சு?
தொடர் போடுகிற அளவுக்கு புத்தாண்டு சந்தோஷம் தொடர்ந்திருக்கு..வாழ்த்துக்கள் நண்பா..
Post a Comment